பக்கம் எண் :

அகத்திணையியல்--நூற்பா எண் 175621

அவன

      அவன்விடுத்து அகறலும்5 தமரொடும் செல்பவள்
     அவன்புறம் நோக்கிக் கவன்றுஅரற் றலும்6 எனும்
     இருமூன்றும் உடன்போக்கு இடையீட்டு விரியே.


     இஃது உடன்போக்கு இடையீட்டுவிரி இத்துணைத்து
என்கின்றது.

     (இ-ள்) நீங்கும் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன்செலவு உணர்த்தி
விடுத்தல் முதலாகத் தமருடன் செல்பவள் அவன் புறம்நோக்கிக் கவன்று

அரற்றல் ஈறாகச் சொல்லப்பட்டட ஆறும் உடன்போக்கு இடையீட்டு
விரியாம் என்றவாறு.

    உரையிற்கோடலான், தமர்பின் சேறலைக் கண்டோர் இரங்கலும்

வரப்பெறும்.
 

விளக்கம்
 

1.    உடன்போக்கில் வீட்டை நீங்கிச் செல்லும் தலைவி தோழியருக்குத்

     தான் தலைவனுடன் போதலைச் சொல்லி அனுப்புதல்.

2
.       தன் உடன்போக்கை நற்றாய்க்கு அந்தணர்வாயிலாகச் சொல்லி

     விடுத்தல்.

3,    நற்றாய்க்கு அந்தணர் தலைவியின் உடன்போக்கை அறிவித்தல்.

4,    நற்றாய் அறத்தொடுநிற்றலின், தன்தமர் வெகுண்டு தன்னைத்
     தலைவனிடமிருந்து மீட்கப் பின்தொடர்ந்து வருதலைத் தலைவி   

     கண்டு தலைவனுக்கு உணர்த்துதல்.

5,    போரிட நேரின் தன் அம்புகளால் தலைவிதமருக்கு ஊறு நிகழ்த்தும் 

     நிலை ஏற்படுமே என்று அஞ்சித் தலைவன் தலைவியை விடுத்து 

     அப்பாற் சென்று மறைதல்.