பக்கம் எண் :

அகத்திணையியல்--நூற்பா எண் 178631

 விளக்கம்
 

        திருமணம் செய்து கொள்வது இல்வாழ்க்கை நடத்தித்
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் துணையாகித் தென்புலத்தார்
தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்னும் ஐம்புலத்து ஆறு ஓம்புதலாதலின்,
திருமணத்தை அடுத்து வரும் கற்பின் முதல்கிளவியாக இல்வாழ்க்கை
கூறப்படுகிறது. இவ்வில்வாழ்க்கையை ‘மணம் சிறப்பு உணர்த்தல்'
என்றுதிருக்கோவையாரும் முத்துவீரியமும் குறிப்பிடும்.

       ‘உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன
        மடந்தையொடு எம்மிடை நட்பு.'

குறள். 122

என்ற குறளிலே தலைவி உடலாகவும் தலைவன் உயிராகவும்
கொள்ளப்படுவதன் சிறப்பு, தனிநிலையில் உடலும் உயிரும் அஃறிணை;
இரண்டும் சேர்ந்த அளவிலேயே உயர்திணை; அதுபோல, தனி நிலையில்
தலைவனோ தலைவியோ சமுதாயத்திற்கு உதவுதல் இயலாது; இருவரும்
கூடியவழியேதான் உதவுதல் இயலும் என்பதாகும். இதனால் கற்புக்காலத்தின்
அடிப்படைக் கடமை இல்வாழ்க்கையாதல் தேற்றம்.

பரத்தையின் பிரிவு


      ‘காதல் பரத்தை நால்வர்க்கும் உரித்தே' (இறை. அக. 40) என்ற
நூற்பா உரைகளைக் கீழ்க் காண்க:

      காதலிக்கப்பட்ட பரத்தையின் பிரிவு எல்லா வருணத்தாருக்கும்
உரித்து என்றவாறு.

     தம்மைக் கண்டு காதலித்தார் என்பது அறிவர் அன்றே, அவர்தாம்
பேரறிவினர் ஆகலான்? அன்னார்தாம் பின்னைத் தலையளியாது விடுவது

அருள் அன்று; அதனால், அஃது எல்லாருக்கும் உரித்து என்பது கொள்க.
இவ்வுரை பொருந்தாது; என்னை காரணம் எனின், மிக்காரைக் கண்டால்
இழிந்தாரும் உயர்ந்தாரும் மற்றும் எல்லாரும் காதலிப்ப;
அவர்மாட்டுஎல்லாம் பிரியல் வேண்டும். பிரியவே, எல்லாக் குற்றமும்
தங்கித்