பக்கம் எண் :

632இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

தலைமையொடு மாறுகொள்ளும். அல்லதூஉம் அன்பினால் பிரியார்,

அருளினால்பிரிவர் என்பதூஉம் சொல்லப்பட்டதாம். அதனால்,
காதலித்தாள்மாட்டுப் பிரியும் பிரிவு அமையாது எனக்கொள்க.

      இனி ஒரு திறத்தார் காதலைச் செய்யும் பரத்தை காதல்பரத்தை
என்ப. என்னை காரணம் எனின், வைகலும் பாலே துய்த்துச் செல்வான்
ஒருவன் இடைஇடை புளிங்கறியும் உண்டக்கால் ஆம் பாலின் விசேடம்
அறிவானாவது. அதுவே போலத் தலைமகள் குணங்களைத் துய்த்துச்
செல்லாநின்றான் இடையிடை சிறுகுணத்தர் ஆகிய பரத்தையர்மாட்டுப்
பிரிந்து வரத் தலைமகள்மாட்டுக் காதல் மிகும்; அல்லாவிட்டால், இவள்
குணம் பொருவுஅரியது என்பது அறியலாகாது. என்னை? இன்னாதது ஒன்று

உண்மையான், இனியதன் இன்பம் அறியப்படும் என்பது.

      இவ்வுரையும் பொருந்தாது; என்னோ காரணம் எனின், அவர்
ஓதியைச் சார்த்திக் கொண்டு அன்றே இவள் குணங்களைப் பெரிய என்பது
அறியும் எனின், அவர்மாட்டுப் பிரியாது நின்றவிடத்து இவள்தன்
குணங்களை மிக்கனகொல்லோ மிக்கில கொல்லோ என ஐயப்பட்டு
நின்றான் ஆகல் வேண்டும்; அங்ஙனம் ஆயின், ‘தான் அவள் என்னும்
வேற்றுமை இலர்' என்பதனோடு மாறுகொள்ளும்; என்னை? தம்
குணங்களை ஐயப்படுவார் இன்மையான் என்பது.

      மற்று என்னோ எனின், தலைமகனால் காதலிக்கப்பட்ட பரத்தை
எனக் கொள்க. அஃதே எனின், இவன் கண்டாரை எல்லாம் காமுறுவன்

ஆகானோ எனின், ஆகான். ஆகாதவாறு சொல்லுதும்:

      தலைமகனால் தலைநின்று ஒழுகப்படுவன தருமம், அருத்தம், காமம்
என மூன்று. அம்மூன்றினையும், ஒரு பகலை மூன்று கூறிட்டு முதற்கண்
பத்து நாழிகையும் அறத்தொடு