என்பதனொடு மாறுகொள்ளும்
என்பது. இனி, தலைமகளை எய்தாத முன்
உடையன் ஆயினானே எனின், இவன் கற்ற காலம் இன்றிக் காமத்துக்
கண்ணே கெழுமி வருகின்றானாம்; ஆகவே, நெறியால் வளர்ந்தான்
அல்லன்
ஆம் என்பது. மற்று என்னோ உரை எனின், தலைமகளை
எய்தாத முன்னே
பரத்தையரை உடையன் என்பது. எனவே,
மேல்சொல்லப்பட்ட குறை
எய்தாதோ எனின், எய்தாது; குரவர்கள் இவன்
அறியாமையே இவன்
உரிமை இது எனவும், மற்றும் எல்லாம் இவற்கு
என்று வகுத்துவைத்துதாம்
வழங்கித் துய்ப்ப என்பது; அவ்வகையே
குரவர்களான் இவன் உரிமை
என்றே வளர்க்கப்பட்டார் ஆகலான்,
தலைமகளை எய்துவதன் முன் உளன்
என்பது. இவன் முன்னே தன்
உரிமையாவது அறிந்தவாறு என்னை எனின்,
தலைமகன் தலைமகளை
நீங்கித் தருமமும் அருத்தமும் உட்பட்டுத்
தலைமகள்மாட்டுப்
போதருமிடத்து, அவர் முன் சொன்னவாறே குழலும்
யாழும் தண்ணுமையும்
முழவும் இயம்புப; இயம்பினஇடத்து இஃது என்னை'
என்னும்; என்றக்கால்,
‘அது நின் உரிமையன்றோ? என்ப; என்றார்க்கு,
‘அஃது என் உரிமை
ஆயினவாறு என்னை?' என்னும்; என்றவிடத்து, ‘நின்
குரவர்களான் நினக்கு
உரிமையாக வழங்கப்பட்டார்' என்ப. ‘ஆயின்,
எம்குரவர்
பணிமாறுகொள்ளல் ஆகாது' என்பதனால், காண்டற்குச் செல்லும்;
சென்றானை அவர் தங்கண் நயப்பிப்ப என்பது. இது பரத்தையிற் பிரிவு
நிகழுமாறு.
அஃதே எனின், மற்றைப்பிரிவு எல்லாம் வேண்டுக, ஆள்வினை
மிகுதி
உடைமையான்; இஃது எற்றிற்கோ வேண்டியது எனின், பரத்தையின்
பிரிந்தான் தலைவன் என்றால் ஊடலே, புலவியே, துனியே என்று இவை
நிகழும்; நிகழ்ந்தால், அவை நீங்கிக் கூடின இடத்துப் பெரியதோர்
இன்பமாம்; அவ்வின்பத்தன்மையை வெளிப்படுப்பன அவை எனக்கொள்க.
மென்சுவைமேலே நடந்தான் ஓர் ஆசிரியன் ஆகலான், இப்பிரிவு
வேண்டினான் என்பது.
(இறை. அக. உரை) |