‘புனைந்துரை உலகியல் எனும்
திறம் இரண்டினும் தொல்லியல்
வழாமல்
சொல்லப்படும்' இலக்கியவழக்கிற்குப் பரத்தையிற் பிரிவு
சுவைதருமேனும், உலகியலுக்கு ஏற்புடைத்தன்று என்பதனை வள்ளுவனார்,
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரைஇலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
குறள். 919
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
குறள். 920
என்று கூறியவாற்றானும், கம்பர் பெருமானும் தசரதன் ‘தோய்ந்தே
கடந்தான்
திருவின்தொடர் போகப்பௌவம்' என்று சுட்டியவாற்றானும்,
சான்றோர்
பிறர்கருத்துக்களானும் உணர்க.
ஓதற் பிரிவு.
தலைவன் ஓதற்குப்பிரியும் எனின், இவன் பொருஇறந்தான்
என்பதனொடு
மாறுகொள்ளும், என்னை? தலைமகளை எய்தி இருந்தே
இவன் ஓதுவான்
பிரிவான்எனின், முன் ஞானம் இலனாம்; இலனாகவே,
ஞானத்தின் வழியது
ஒழுக்கம் ஆகலானும், ஒழுக்கத்தின் வழித்துத்
தலைக்குலம் ஆகலானும்
இவையெல்லாம் குறைபட்டானாம் என்பது.
அற்றன்று; பண்டே குரவர்களால்
கற்பிக்கப்பட்டுக் கற்றான், அறம் பொருள்
இன்பம் வீடுபேறுகள் நுதலிய
நூல்கள் எல்லாம்; ‘இனி, பரதேசங்களினும்
அவை வல்லார் உளர்எனின்,
காண்பல்' என்று, வல்லார்கள்
உள்வழிச்சென்று தன் ஞானம் மேற்படுத்து
அவர் ஞானம் கீழ்ப்படுத்தற்குப்
பிரியும் எனக்கொள்க. (இறை. அக. 35
உரை)
இனி, இல்லறத்தில் வாழும் தலைவன் பின்னர்ப்பின்பற்றுதற்குரிய
வானப்பிரத்த சந்நியாச நிலைகளுக்கு வேண்டிய கல்வியை ஞனாக்குரவர்
வாயிலாகக் கற்றற்குப்
பிரிவான் என்பது நச்சினாக்கினியர் கருத்து.
(தொல். பொ. 188 நச்.) |