பக்கம் எண் :

636இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

காவல் பிரிவு.

      தலைவன் நாடுகாவலுக்குப் பிரியும்எனின், அவன் நாட்டைப் பிறர்
புகுந்து அலைப்பதும் கொள்வதும் செய்ய, அவரை நீக்குதற்கு நீங்கும்

எனின், இங்ஙனம் பிறரால் இளி வந்தனசெய்து நலியப்படுமேஎனின்,
ஆண்மையில் குறைபட்டானாம் என்பது. அற்றன்று;

      நாடு காத்தற்குப் பிரியும் என்பது நலிவார் உளராக நலிவு
காத்தற்குப் பிரியும் என்பது அன்று. நாட்டகத்து நின்றும் நகரகத்தும் தமக்கு
உற்றது உரைக்கலாத மூத்தார்களும் பெண்டிர்களும் இருகைமுடவரும்
கூனரும் குருடரும் பிணியுடையாரும் என இத்தொடக்கத்தார்
தம்முறைக்கருமம் கேட்டுத் திருத்துதல் பொருட்டாகவும், காட்டகத்து
வாழும் உயிர்ச்சாதிகள் ஒன்றனைஒன்று நலிவன உளவாயினஇடத்துத் தீது
என்று அவற்றைமுறைசெய்வதற்கும், கொடிவலைப்பட்டுக் கிடந்தனவற்றைத்
துறைநீக்குதல் பொருட்டாகவும், வளம் இல் வழி வளம் தோற்றுவித்தற்
பொருட்டாகவும், தேவகுலமே சாலையே அம்பலமே என்று
இத்தொடக்கத்தனவற்றை ஆராய்தற்கும், அழிகுடி ஓம்புதற்கும் பிரியும்
என்பது. அல்லதூஉம், பிறந்தஉயிர் தாயைக்கண்டு இன்புறுவதுபோலத்
தன்னால் காக்கப்படும் உயிர்வாழ் சாதிகள் தன்னைக்கண்டு இன்புறுதலின்,
தான் அவர்கட்குத் தன் உருக்காட்டுதற்கும், மாற்றரசர் ஒற்று வந்தஇடத்து
அவர் முன்னர்த் தன்ஊக்கம் காட்டுதற்பொருட்டாகவும் பிரியும். அதனானே
மாற்றரசரும் திறைகொடுப்பர் என்பது.

(இறை.அக. 35 உரை)
 

தூதின் பிரிவு.

     சந்து செய்வித்தற்குப் பிரியுமேஎனின், தூதுவன் ஆயினானாம்;
தூதுவராவார் பிறருக்குப் பணிசெய்து வாழ்வாராவர்; அவரது பொருவிறுப்பு
என்னையோ என்பது அற்றன்று;