தலைவன் தூதுவர்போலச் சந்துசெய்வித்தற்குப்
பிரியும் என்பது
அன்று. இருவர் அரசர் ‘நாளைப் பொருதும், இன்று பொருதும்’ என்று
முரண்கொண்டு
இருந்த நிலைமைக்கண் தான் அருள்அரசன் ஆகலின்,
‘இம்மக்களும் இவ்விலங்குகளும் எல்லாம்
பட, இவ்விரண்டு குலத்திற்கும்
ஏதம்நிகழும்; அதனால் இப்போர் ஒழிப்பன்’ என்று
இருவரையும் இரந்து
சந்து செய்வித்தலும் ஒன்று. அல்லதூஉம், தேவரும் அசுரரும் பொருத
காலத்துத்
தேவரையும் அசுரரையும் ‘ஒருவீர் ஒருவீர் மிக்காரை ஒறுப்பல்
யான்’ என்று பாண்டியன் மாகீர்த்தி
சந்துசெய்வித்ததுபோல, ‘இருவரின்
மிகைசெய் தீரை ஒறுப்பல்’ என்று சந்து செய்வித்தலும்
ஒன்று; இருவரையும்
ஒறுக்கும்துணை ஆற்றலுடையனாகலான் என்பது. அஃதே எனின்,
தன்னகத்து
இருந்து விட அடையாதோ, அன்ன ஆற்றலின் ஆகலான்?
தான் செல்லவேண்டுமோ எனின், செல்லவேண்டும்
என்பது; என்னை?
காதலர்ப் பிரிந்து ஒருகருமம் முடிப்பதனின் மிக்க ஆள்வினை
இல்லைஎன்பது.
ஆதலால், பிரிந்தே சந்துசெய்விக்கும் என்பது.
(இறை.அக.35 உரை)
துணைவயின் பிரிவு.
தலைவன் வேந்தர்க்கு உற்றுழிப் பிரியுமே எனின், கருமச்சேவகன்
ஆம்;
கருமம் செய்வான் சேவகன் என்ப, இறப்பவும் இழிவந்ததோர்
ஒழுக்கம்.
பிறர்குறிப்பன்றித் தன் குறிப்பு இல்லை எனப்படும்; ஆதலின்,
இவரது
பொருவிறப்பு என்னையோ என்பது. அற்றன்று;
சேவகனாய்ப் பிரியும் என்பது அன்று; தனக்கு நட்டான் ஓர் அரசன்
சென்றஇடத்து அவற்கு ஆய
மறுதலையை வென்று நீக்குதற்குப் பிரியும்
என்றுகொள்க.
(இறை.அக.35 உரை)
|