பக்கம் எண் :

638இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

பொருள்வயின் பிரிவு.

      தலைவன் பொருள்வயின் பிரியுமே எனின், முன்னர்ப் பொருளிலன்
ஆயினானாம்; ஆகவே, எள்ளுநர்ப் பணித்தலும் இரந்தோர்க்கு ஈதலும்
என்னும் இவை எல்லாம் பொருட் குறைபாடு உடையார்க்கு நிகழாமையின்,
இக்குறைபாடு எல்லாம் உடையனாம்; அவை உடையானது பொருவிறப்பு
என்னையோ என்பது. அற்றன்று;

       பொருட்பிணி என்பது பொருள் இலனாய்ப் பிரியும் என்பது அன்று.
தன் முதுகுரவரால் படைக்கப்பட்ட பொருள் எல்லாம் கிடந்ததுமன்.

அதுகொடு துய்ப்பது ஆண்மைத் தன்மை அன்று எனத் தனது
தாளாற்றலால் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்தற்குப் பிரியும்
என்பது. அல்லதூஉம் தேவர் காரியமும் பிதிரர் காரியமும் தனது
தாளாற்றலால் படைத்த பொருளால் செய்தன தனக்குப் பயன்படுவன;
என்னை? தாயப்பொருளால் செய்தது தேவரும் பிதிரரும் இன்புறார்
ஆதலான், அவர்களையும் இன்புறுத்தற்குப் பிரியும் என்பது.

(இறை அக. 35 உரை)

 

ஒத்த நூற்பாக்கள்
 

     ‘ஓதல் பகையே தூதுஇவை பிரிவே.’           

தொல். பொ. 25

 

     ‘பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே.’            

33

 

     ‘காவல் பாங்கின் ஆங்கோர் பக்கமும்


     பரத்தையின் அகற்சி’                                  

41

  

     ‘வேண்டிய கல்வி யாண்டுமூன்று இறவாது.’                 

188

 

     ‘வேந்துறு தொழிலே யாண்டினது அகமே.’                 

189

 

     ‘ஏனைப் பிரியும் அவ்வயின் நிலையும்.’                   

190

 

      ‘பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே
 

      நிலத்திரி பின்றுஅஃது என்மனார் புலவர்.’               

 224

 

     முழுதும்--                                      ந. அ. 20