'ஓதல் காவல் பகைதணி வினையே
வேந்தர்க்கு உற்றுழி பொருட்பிணி பரத்தைஎன்று
ஆங்க ஆறே அவ்வயின் பிரிவே,’
இறை அக. 35
மு வீ. கற். 3
கற்பினுள் துறவே கடிவரைவு
இன்றே!
இறை, அக. 34
‘பெருகும் இல் வாழ்க்கை பரத்தையின் பிரிதல்
செருவினுக்கு உற்றுழிச் செல்வ துடனே
பொருவில் புரத்தலின் பொருள்வயின் பிரிதல்
தூதில் பிரிதல் சுருதி முதலிய
ஓதப் பிரிதலோடு ஓரேழ் என்ப
கிளந்த கற்பின் கிளவித் தொகையே.’
மா. அ. 98
178
இல்வாழ்க்கையின்
வகை
551 கிழவோன் மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி
பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சிஎன்று
ஈங்குநால் வகைத்து இல்வாழ்க் கையே.
நிறுத்தமுறையானே இல்வாழ்க்கை கூறுவனவற்றுள், இஃது
அதன்வகை இத்துணைத்து என்கின்றது.
(இ.ள்) கிழவோன் மகிழ்ச்சி முதலாகச் செவிலி மகிழ்ச்சி
ஈறாகச்சொல்லப்பட்ட
நாலுவகையினை உடைத்தாம், இல்வாழ்க்கை
என்றவாறு.
179
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்--
ந. அ. 202
‘இறைவன் மகிழ்ச்சி
இறைமகள் மகிழ்ச்சி
நிறைபயில் செல்வி நீதியின் மகிழ்ச்சிஎன்று
இயம்பிய நால்வகைத்து இல்வாழ்க் கையே.’
மா.அ. 98
179 |