5 பாங்கி தலைவனை நோக்கி
‘நின் திருமணநாள் வரும் அளவும்
யாங்கனம் வருந்தாது இருந்தாய்? என்று வினவுதல்.
6 தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மணமனைக்கு வந்த
செவிலியை நோக்கிப் பாங்கி
அவ்விருவருடைய காதல்
சிறப்பையும் எடுத்துஉரைத்தல்.
7 அவர்தம் இல்வாழ்க்கை சிறப்புற்று இருக்குமாற்றைத் தோழி
செவிலிக்குக் கூறுதல்.
8 செவிலி தன் மனைக்கு மீண்டு வந்து தலைவியின் நற்றாயிடம்
அவளது கற்பியல்பைப் பாராட்டிக்
கூறுதல்.
9 செவிலி தலைவி இல்லறம் நடத்தும் வனப்பினை நற்றாயிடம் பாராட்டி
உரைத்தல்.
10 செவிலி தலைவன்தலைவி என்ற இருவருடைய காதல் சிறப்பையும்
நற்றாயிடம் பாராட்டிக்
கூறுதல்.
ஒத்த நூற்பாக்கள்
‘மணமுரசு கூறல் மகிழ்ந்துரைத் தல்லொடு
வழிபாடு கூறல் வாழ்க்கைநலம் கூறல்
காதல்கட் டுரைத்தல் கற்புஅறி வித்தல்
கற்புப் பயப்பு உரைத்தல் காதல்மருவு உரைத்தல்
கலவி உரைத்தல் கருதிய ஒன்பதும்
நலம்மிகு மணம்இவை நாடும் காலே.’ திருக்கோவை
மு. வீ. கற். 2
முழுதும்--
ந. அ. 203
‘இறைவன் இறைவிமுன்பு
இகுளையைப் புகழ்தலும்
இறைவனை இகுளை இன்புற்று வாழ்த்தலும்
வரையும் துணையும் வருந்தாது இருந்தமை
81 |