உரைஎன்று இகுளைஒண் ணுதலை
வினாதலும்
ஒண்ணுதல் உணர்த்தலும் அண்ணலைப் பாங்கி
மடந்தையை வரையும்நாள் அளவும் திடன்பெற
ஆற்றிய நிலைமை அதனை வினாதலும்
திருமனை வந்த செவிலிக்கு இகுளை
இருவர் அன்பும் எழில்பெற உணர்த்தலும்
நயத்தஇல் வாழ்க்கைநன்கு இயம்பலும் நன்னுதல்
பயந்தநற் றாய்க்குஅவள் சென்றுஅதைப் பகர்தலும்
என்னும்ஐ யிரண்டும் இல்வாழ்க்கை விரியே.’
மா. அ. 100]
தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல்:
அந்நாள் முதல்இன்று அளவுஉள வாய அரும்படர்போய்ப்
பொன்ஆர் அமளி பொருந்தினம் யாம்பொருந் தாதவர்முன்
இன்னா அரும்பிணிக்கு இனிமருந் தாக இடைநின்றுநீ
முன்னாள் முயன்ற முயற்சிஇவ் வாறு முடிந்ததுவே.
அம்பி. 435
எனவரும்.
[அன்றுமுதல் இன்றுவரை களவு ஒழுக்கத்தான் உண்டாகிய
நினைவுமிகும்
நோய்தீரப் பொன்மயமான படுக்கையில் யாங்கள்
பிணைந்துவிட்டோம்.
பகைவர்கள் தந்த கொடிய நோய்களுக்கு எல்லாம்
இனிய மருந்தாகுமாறு,
தலைவிக்கும் எனக்கும் இடைநின்று நீ இதுவரை
முயன்ற முயற்சி இவ்வாறு
முடிந்துள்ளது.]
ஒன்றென முடித்தலால்
தலைவனைப் பாங்கி புகழ்தலும் வரப்பெறும். அதற்குச் செய்யுள்:
பனிநின்ற சோலைப் பலவுச் சினைகலை பாய்ந்துஉகளக்
கனிநின்று நீளும் கணமலை நாட கழைக்கரும்பை |