பக்கம் எண் :

650இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

இஃ

      இஃது இளைய கலாம் ஆகிய ஊடல் விரி இத்துணைத்து

என்கின்றது.

     (இ-ள்) காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு ஏது ஈதாம்
இவ்விறைவிக்கு என்றல் முதலாகப் புணர்ச்சியின் மகிழ்தல் ஈறாகச்
சொல்லப்பட்ட பதினொன்றும் உணர்த்த உணரும் ஊடற்கு உரியவாம்
என்றவாறு.
 

விளக்கம்


     பரத்தையின் பிரிவு--பரத்தையின்பம் நுகர்தற்குத் தலைவன் பிரிதல்.

1    தலைவன் பரத்தைபால் இன்பம் நுகர்தற்குப் பிரிந்த இடத்து 

    அச்செயலை அறிந்தவர்கள் இவன் இங்ஙனம் பிரிந்தது தலைவியின்

    ஊடலுக்குக் காரணமாம் என்றல்.

2   தனித்த இடத்துத் தலைவி துன்பம்உற்று வருந்துதல்.

3   ‘இங்ஙனம் நீ துன்புறுதலுக்குக் காரணம் யாது?' என்று தலைவியைப்

     பாங்கி வினாவுதல்.

4    தலைவன் பரத்தைபால் சென்றதனைத் தலைமகள் தோழிக்கு

     உணர்த்துதல்.

5    ‘தலைமகனுடைய குற்றத்தைக் கூறுதல் கற்புடைமைக்குத் தகாது' என்று

     பாங்கி தலைவியை இடித்து உரைத்தல்.

6    தலைவி பூப்பு உற்றதைத் தலைமகன் அறிதற்குத் தலைவி, செம்மலர்
     முதலியவற்றை அணிந்துகொள்ளச்செய்து ஒருத்தியைப் பரத்தை  

     வீட்டில் இருக்கும் தலைவன்பால் விடுத்தபொழுது, அதனைக்கண்ட 

     அயலார் வருந்திக் கூறுதல்.

7    செவ்வணி அணிந்து வந்தவளைக் கண்டு பரத்தையர் தலைவியைப்  

     பழித்துப் பேசுதல்.