யோடு தழுவாமல் கனவை நனவாகக்
கருதிப் பாவியாகிய நான் விழித்தேன்
ஆதலின், கனவிலும் தலைவனைக் கூடும் வாய்ப்பை இழந்தேனே! ]
செஞ்சுடர்க்கு உரைத்தல்:
செய்ம்முகம் நீலம் மலர்தில்லைச்
சிற்றம் பலத்துஅரற்குக்
கைம்முகம் கூம்பக் கழல்பணி யாரின் கலந்தவற்குப்
பொய்ம்முகம்காட்டிக்கரத்தல்பொருத்தம்அன்றுஎன்றிலையே
நெய்ம்முகம் மாந்தி இருள்முகம் கீளும் நெடுஞ்சுடரே.
திரு. 356
எனவும்,
[நெய்யை உட்கொண்ட இருளைப்போக்கும் விளக்கே! ‘வயலிலே
நீலம்
மலரும் சிற்றம்பலத்துச் சிவபெருமானை வழிபட்டுக் கைகூப்பி அவன்
திருவடிகளைப் பணியாதவர்கள்போலத் தம்மைக்கூடிய தலைவியருக்கு
முகத்தைக் கனவிலே காட்டி நனவிலே மறைதல் பொருத்தம்அன்று'
என்பதை என் தலைவனுக்கு நீ கூறவில்லையே. ]
வாரம் பகர்ந்தது:
பூங்கு வளைப்பொலி மாலையும்
ஊரன்பொன் தோள்இணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனும் கொள்கநள் ளார்அரணம்
தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச் சிற்றம் பலத்துஅயல்வாய்
ஓங்கு வளைக்கரத் தார்க்குஅடுத் தோம்மன் உறாவரையே.
திரு. 357
எனவும்,
[பகைவர் அரணை அழிக்க மேருவை வில்லாக வளைத்ததில்லைச்
சிற்றம்பலத்தானுடைய புறச்சேரியில் பரத்தையருக்குத் தலைவனை
மானியமாக வழங்கிவிட்டோம். தலைவனுடைய குவளைப்பூமாலையையும்
அவன் தோள்களையும் யார் வேண்டுமாயினும் வளைத்து
வைத்துக்கொள்வாராக.] |