பக்கம் எண் :

662இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

தண
 

       தணியாள் ஆகத் தலைமகன் ஊடலும்13
      அணிவளைப் பாங்கி அன்புஇலை கொடியைஎன்று
      இணர்த்தார் மார்பனை இகழ்தலும்14 பிறவும்
      உணர்த்த உணரா ஊடற்கு உரிய.


     இது முதியகலாம் ஆகிய ஊடல்விரி இத்துணைத்து என்கின்றது.

     (இ-ள்) வெள்ளணி அணிந்து விடுப்புழித் தலைவன் வாயில்

வேண்டல் முதலாகப் பாங்கி தலைவன் அன்புஇலை கொடியை என்று

இகழ்தல் ஈறாகச் சொல்லப்பட்டனவும் பிறவும் உணர்த்த உணரா ஊடற்கு

உரியவாம் என்றவாறு.

     அநுவாதமுகத்தான், வெள்ளணி அணிந்து விடுத்தலும் வரப்பெறும்.


விளக்கம்
 

1    தான் புதல்வனைப் பெற்றமையைத் தலைவனுக்கு அறிவித்தற்கு 

    நினைத்து வெண்மலர் முதலியவற்றை அணிந்து கொள்ளச் செய்து    

    ஒருத்தியைத் தலைவியானவள் தலைவன்பால் விடுத்த இடத்து,

    அதுகண்டு அவன் வந்து நின்று, ‘யான் தலைவியைப் பார்க்கும்படி  

    செய்தற்கு நீ தூதாக வேண்டும்' என்று பாங்கியை வேண்டுதல்.


2   தலைவி புனிறுதீர்ந்து நெய் முழுகியதைப் பாங்கி தலைவனுக்குத்  

    தெரிவித்தல்.


3   தலைவன் தன் மனத்தின்கண் மகிழ்ச்சி மிகுதல்,


4   தலைவிக்கு தலைவன் வந்துள்ள செய்தியை பாங்கி சொல்லுதல்.


5   தலைவி தலைவன் வருகையை உணர்ந்து தலைவனோடு வெகுளுதல்.