பக்கம் எண் :

688இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

அயல

அயல்அறிவு உரைத்துஅவள் அழுக்கம் எய்தல்
செவ்வணி கண்ட வாயிலவர் கூறல்
மனைபுகல் கண்ட வாயிலவர் கூறல்
முகம்மலர்ச்சி கூறல் முனிவது என்னெனக்
காலம்நிகழ்வு உரைத்தல் கலவி எய்தலை
எடுத்துரைத் தல்லொடு கலவி கருதிப்
புலத்தல் குறிப்புஅறிந்து புலந்தமை கூறல்
வாயிலவர் வாழ்த்தல் புனல்வரவு உரைத்தல்
தேர்கண்டு மகிழ்தல் சேடியர் விழவின்
தம்முள் உரைத்தல் தன்னை வியத்தல்
நகைத்துஉரைத் தல்லொடு நாண்கண்டு உரைத்தல்
பாணன்வரவு உரைத்தல் பாங்கிஇயல் பழித்தல்
உழையர்இயல் பழித்தல் ஒன்ணுதலாள் அவற்கு
இயற்பட மொழிதல் இயல்புநினைந்து உரைத்தல்
வாயில் பெறாது மகன்திறம் நினைதல்
வாயிற்கண் நின்று தோழிக்கு உரைத்தல்
வாயில் வேண்டத் தோழி கூறல்
மன்னிய தோழி வாயில் வேண்டல்
மனையவர் மகிழ்தல் வாயில் மறுத்தல்
பாணனொடு வெகுடல் பாணன் புலத்தல்
விருந்தொடு செல்லத் தணிந்தமை கூறல்
ஊடல்தணி வித்தல் அணைந்தவழி ஊடல்
புனல் ஆட்டு வித்தமை கூறிப் புலத்தல்
கலவி கருதிப் புலவி புகறல்
மிகுத்துஉரைத்து ஊடல் விறல்வேல் காளை
ஊடல் நீட வாடி உரைத்தல்
துனிமொழிந்து உரைத்தல் துகள்ஒன்று இல்லாப்
புதல்வன்மேல் வைத்துப் புலவி தீர்தல்
கலவிஇடத்து ஊடல் முன்நிகழ்வு உரைத்தல்
பரத்தையைக் கண்டமை பயன்படக் கூறல்
ஊதியம் எடுத்துஉரைத்து ஊடல் தீர்த்தல்