ஒரு தன்மைபற்றிக் கூறுதலான்
ஒன்பது வகையவாம் எனவே,
பலதன்மை
பற்றிக் கூறின் பல்வேறு வகையவாம் என்பதூஉம் பெற்றாம்.
பெறவே,
வகைவேறுபாடே விரி ஆகலின், அவற்றின் விரியும் உடன்
கூறினார்
என்பது. பிரிவு அறிவுறுத்தல் ஒரு தன்மைபற்றிக் கூறும்இடத்து
ஒன்றாயினும்,
தலைவன் பாங்கிக்குப் பிரிவு அறிவுறுத்தலும் அவள்
அதனைத் தலைவிக்கு
அறிவுறுத்தலும் எனப் பல தன்மை பற்றிக் கூறும்
இடத்துப் பலவாமாறும்
காண்க. ஏனையவற்றிற்கும் ஏற்புழி இவ்வாறே
உய்த்து உணர்க.
விளக்கம்
1 தலைவன் தான் பொருள் முதலிய
குறித்துப் பிரியவேண்டிய நிலையைத்
தலைவிக்குத் தோழி வாயிலாக அறிவுறுத்தல்.
2 தொடக்கத்தில் தலைவி தலைவனுடைய பிரிவிற்கு இசையாதிருத்தல்.
3 தலைவனும் தோழியும் பொருள் முதலிய குறித்துப் பிரிய வேண்டுவதன்
இன்றியமையாமையைத் தலைவிக்கு எடுத்து இயம்பி அவளைப்
பிரிவிற்கு
இசையச்செய்தல்.
4 தலைவி தலைவனுடைய பிரிவிற்கு இசைதல்.
5 தலைவன் பிரிந்தவழித் தலைவி ஆற்றாது கலங்குதல்.
6 தலைவி பிரிவு குறித்து வருந்தலாகாது என்று தோழி வற்புறுத்தல்.
7 தலைவி அரிதின் பொறுத்து ஆற்றியிருத்தல்.
8 வினைமுற்றி மீண்டு வரும் தலைவன் வரும்வழியில் மாவும் புள்ளும்
முதலிய கண்டு தலைவியை
நினைத்துக் கலங்குதல். |