ஒழிபியற் பகுதி
___
அகப்பொருள்
இயல்
559 கூறிய அகப்பொருள் ஆறுஇரு வகைத்தாய்ப்
பாட்டுஉறுப் பாய்வரூஉம் பண்பிற்று என்ப
போக்குஅறு மரபின் புல்லிய நெறித்தே.
மேல் கூறியவாற்றான், அகப்பொருள் இலக்கணம்
அகத்திணைஇயலுள்ளும்
புறப்பொருள் இலக்கணம் புறத்திணை இயலுள்ளும்,
அணி இலக்கணம்
அணிஇயலுள்ளும் செய்யுள் இலக்கணம்
செய்யுள்இயலுள்ளும் உணர்த்தி,
அவற்றின் ஒழிபு இலக்கணங்களுள்
ஒவ்வொன்றற்குச் சிறந்தனவற்றை
அவ்வவ் வோத்துக்களுள் உணர்த்தி,
அந்நான்கற்கும் பொதுவாய் எஞ்சி
நின்றவற்றைப் பாட்டியலுள்
உணர்த்துவான் தொடங்கி, அவ்வாறு
அகத்திணைஇயல் உணர்த்தி
அதன்ஒழிபு உணர்த்திய புகுந்தவற்றுள்,
செய்யுள் இடவயின் புல்லிய
நெறித்தே.' [இ. வி. பொ. 2] என்பதனான், இச்
சூத்திரம் அகப்பொருள்
செய்யுள்அகத்து வருங்கால் இத்துணைப்
பகுதிப்பட்டு இவ்வாறு வரும்
என்பதோர் ஒழிபு கூறுகின்றது; என்னை?
பொதுப்படச் ‘செய்யுள் இடவயின்
புல்லிய நெறித்தே' என்ற துணை அல்லது
பன்னிரு பகுதிப்பட்டு உறுப்பாய்
வரும் என்னும் விசேடவிதி ஆண்டுப்
பெறப்படாமையின்.
(இ-ள்) மேல்கூறிப்போந்த அகப்பொருள் செய்யுளகத்து வருங்கால்,
பன்னிருபகுதியை உடைத்தாய்ச் செய்யுட்கு உறுப்பாய் வந்து விளங்கும்
இயல்பினை உடைத்தாம் என்றவாறு.
90 |