பக்கம் எண் :

716இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

யுளகத்து அதற்கு உறுப்பாய் வருதலும், களவும் கற்பும் ஆகிய கைகோள்
இரண்டனுள் ஆண்டைக்கு இயைபுடைய யாதானும் ஒரு கைகோள்
செய்யுளகத்து அதற்கு உறுப்பாய் வருதலும் பொருந்தித்தோன்றும்

என்றவாறு.

‘முன்னவை இரண்டும் சொன்னவை யாகும்.'

என்றே ஒழியின் கூறியது கூறலாம் அல்லது அகத்திணை ஒழிபு
ஆகாமையின் ‘வரும்' என்றும், ஒன்று அவண் வரும் என்னாது வாளா
வரும் எனின், அவை வரினும் வரும், வாராது ஒழியி்னும் ஒழியும்
எனப்படுதலான், ‘ஒன்று அவண் வரும்' என்றும் கூறினார் என்று உணர்க.


189

விளக்கம்


      ‘முன்னவை இரண்டும் சொன்னவை ஆகும்.' ந. அ. 212 என்று
கூறின், முன்னர்க் கொள்ளப்படும் திணையும் கைகோளும் பண்டே விளங்க
உரைக்கப்பட்டன என்ற செய்தி பெறப்படுமே அன்றி, திணையும்
கைகோளும் அகப்பாட்டு உறுப்பாய் அகத்திணைச் செய்யுட்கண் தவறாது
வரும் என்ற கருத்துப் பெறப்படாது. திணையும் கைகோளும் அகப்பாட்டு
உறுப்பாய் வரும் என்று கூறாமல், வாளா திணையும் கைகோளும் முன்பு
கூறப்பட்டன என்றே ஒழியின், வேறு பயப்பாடு இன்மையில் கூறியது கூறல்
என்ற குற்றமாகவே ஒழியும்.

     அகப்பாட்டில் திணை ஒன்றும் கைகோள் ஒன்றும் தவறாது வரும் என்று கூறப்படவேண்டுவதே செய்தி ஆதலின், ‘அவற்று, ஒன்று அவண் வருதல் ஒன்றித் தோன்றும்' என்ற தொடர் இன்றியமையாது கூறப்பட வேண்டுவது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.


முன்பு சொல்லப்பட்ட செய்தியாவன:


    ‘அதுவே கைக்கிளை ஐந்திணை ஏனைப்
     பெருந்திணை எனஎழு பெற்றித் தாகும்.'

 இ. வி. பொ. 4

எனவும்,