எடுத்துக்காட்டுக்கள் பேராசிரியர்
குறிப்பிட்டுள்ளனவாம். கூற்றுக்கு உரியார்
இன்னார் என்று கூறியதன்கண் அமைந்த முறைவைப்பின் காரணத்தையும்
பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
‘பார்ப்பான் என்பான், நன்றும் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவான்
எனப்படும். பாங்கன் என்பான், அவ்வாறு அன்றித் தலைமகன்வழிநின்று
ஒழுகிவரும் ஆகலின், அவனை அவன்பின் வைத்தான். தோழி,
அவன்போன்றும், பெண்பால் ஆகலின் அவளைப் பின்வைத்தான். செவிலி,
மாற்றம் சிறுவரவிற்று ஆகலின், அவளை அவளின் பின்வைத்தான்.
அவரின் சிறந்தமையின் சீர்த்தகு
சிறப்பின் கிழவனையும் கிழத்தியையும்
அவர்பின்
வைத்தான். அவ்விருவருள்ளம் தலைமகளது கூற்றே
பெருவரவிற்று
ஆகலின், அவளைக் களவிற்குரிய கூற்றுக்கு உரியோருள்
இறுதிக்கண்
வைத்தான் என்பது.
‘இசையின் பின்னரது நாடகம் ஆதலின் பாணன் பின் கூத்தன்
வைத்தும்,
பெண்பால் ஆகலான் விறல்பட ஆடும் விறலியைக் கூத்தன்பின்
வைத்தும்,
அவ்வினத்துப் பரத்தையரை அதன்பின்வைத்தும், பொருட்குச்
சிறந்தார்
ஆகலின் நற்பொருள் உணரும் அறிவரை அவர்பின் வைத்தும்,
ஏதிலாராகிய
கண்டோரை அவர்க்குப்பின் வைத்தும் கூறினான் என்பது.'
‘பெயர்த்தனென் முயங்க'
மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்த இக் கூற்றி்ல், ‘என் மகள்
உடல்
தண்ணியளாயிருந்தும், முன்னொருகால் தழுவிக் கைநெகிழ்த்த
பின்னர் யான்
பின்னொரு கால்தழுவ, அத்தழுவுதலால் உடல்
வியர்ப்பதாகக் கூறினாள்.
தலைவனது முயக்கத்தையே இன்பமாகக்
கருதியவள் ஆதலின்,
|