பக்கம் எண் :

720இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

என

என் முயக்கம் அவளுக்கு வெறுப்பைத் தத்தது’ என்று அமைந்தவாறு
காண்க.

‘பாலும் உண்ணாள்’

      தன் மகள் பால்குடிப்பதனையும் வெறுத்து மனத்தில் துயரங்
கொண்டு உடல் பசந்த காரணத்தைச் செவிலி வினவினாளாக, அவள்
வினவியதைத் தோழி கொண்டுகூறுவதாக இப்பாடல் பகுதி அமைந்துள்ளது.

கேளிர் வாழியோ கேளிர்’

      தலைவன், தன் நெஞ்சத்தைப் பிணித்துக் கொண்ட தலைவியின்
ஆகத்தை ஒரு நாள் தழுவப் பெறுவதனையே தன் பிறவிப் பேறாகக்
கொண்டு அதற்கு ஆவன புரியுமாறு பாங்கனிடம் அவன் கூற்றிற்கு
எதிர்மறுத்து விடைகூறு மாற்றான் சொற்றது இது.

‘விளங்குதொடி முன்கை’

     ‘இன்னிசை உருமொடு’ என்ற, சேட்படுத்து வந்த தலைமகற்குத்
தலைவி கூறிய பாடற்பகுதி இது. 'நாடனே! நின் வருகையை நாடிப் பலரும்
உறங்கும் கங்குலில் வாடைக் காற்றில் யாம் துயிலின்றிக் காத்திருக்கும்
நிலை, எம் இளநகில் ஞெமுங்கப் பலகால் எம் கைகளால் நின்னை
மார்புறத் தழுவுதலின் இனியதாக உள்ளது’ என்று குறிப்பால் வெறுப்பைக்
காட்டித் தலைவி சொற்றது இது.

‘ஆடலில் பயின்றனை’

     ‘யான் நாடகம் ஆடுபவன் ஆதலின், அதன்கண் இல்லது புணர்த்து
நடிப்பது போல நடிக்கும் என் கூற்றாகக் கருதாமல் என் சொற்களை
உண்மை எனக்கொண்டு ஊடல் தீர்தல் வேண்டும்’ என்று கூத்தன்
தலைவியை வாயில் வேண்டியது.