பக்கம் எண் :

738இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

நூற
 

      நூற்பாச்செய்தி-காமம், கூடுங்கால் இன்பமும் பிரியுங்கால் துன்பமும்
மிகுதியாகப் பயப்பது. இரண்டு நிலையின்கண்ணும் தலைவனுக்கும்
லைவிக்கும் உள்ள இயல்பான தன்மைக்கண் வேறுபாடு நிகழும்.
அவர்களிடை இயல்பாக உள்ள சாந்தநிலை நீங்கி நகை முதலிய எண்வகை
மெய்ப்பாடுகளும் தோன்றும். அவர்கள் தம் மனத்தை உறுப்புஉடையது
போலவும் உணர்வுஉடையது போலவும் மறுத்துஉரைப்பது போலவும்
கற்பனை செய்துகொண்டு பேசுவர்; தம்மோடு உரையாடும் இயல்பின
அல்லாத அஃறிணைப் பொருள்களையும் தம்மோடு உரையாடுவனபோலக்
கற்பனை செய்துகொண்டு அவை செய்தல் இயலாத தூதுபோதல் முதலிய
செயல்களை அவை செய்யுமாறு குறிப்பிடுவர்; யாவராவது ஒரு துன்பம்
உற்றால் அத்துன்பம் தம்மைப் போன்று பிரிதலினால் உண்டான துன்பமே

என்று கற்பனை செய்துகொண்டு அவரோடு உரையாடத் தொடங்குவர்; இச்
செயலை உரையாடுதல் இயலாத அஃறிணைப் பொருட்கண்ணும்
நிகழ்த்துவர். உபமானப் பொருள்களை எல்லாம் உபமேயமாகக் கருதிக்
காதல் செய்வர்.

      இந் நிலைகள் உலகஇயலுக்கு மாறுபட்டன ஆதலின், இவை
அகப்பொருட்கண் வழுவமைதியாகக் கொள்ளத் தக்கன.

      இந் நூற்பாவின் சில பகுதிகளுக்கு நச்சினார்க்கினியர் வேறு உரை
கூறுவர். அவர் உரை பின்வருமாறு:

      ‘துன்பம் இன்பம் ஆகிய இரண்டு நிலைக்களத்துக் காமம் கருதின
வரலாற்று முறைமையிடம் விளங்க, நகைமுதலிய எட்டன் கூறுபாடும்
தோன்ற, மன அறிவும் பொறிஅறிவும் வேறுபட நிறுத்தி, அஃறிணை
இருபாற்கண்ணும் உயர்திணை மூன்று பொருளும் உரியவாக, கூறுகின்ற
அவரவர் தமக்குப் பொருந்திய உறுப்பெல்லாம் அது உடையது போலவும்
உணர்வு உடையது போலவும் மறுமாற்றம் தரு-