|
வது போலவும் தம் நெஞ்சொடு
புணர்த்துச் சொல்லியும்,
வார்த்தைசொல்லா
முறைமை உடையனவாகிய புள்ளும் மாவும்
முதலியவற்றோடே அவை
வார்த்தை கூறுவனவாகப் பொருந்தி, அவை
செய்தல் ஆற்றாத
முறைமையினை உடைய தொழிலினை அவற்றின் மேலே
ஏற்றியும், அச்சொல்லா மரபினவை உற்ற பிணிகளைத் தம் பிணிக்கு
வருந்தின போலச்
சார்த்திக் கூறியும், அம்மூவகைப் பொருளை உவமம்
செய்தற்குப்
பொருந்துமிடத்து உவமத்தின் வழியிலே சார்த்திக் கூறுதலும்
அத்தலைவர்க்கும் தலைவியர்க்கும் உரிய இலக்கணத்தின் பக்கச் சொல்லாம்
என்றவாறு,
தெரிய விளங்க உரியவாகப் புணர்த்தும் அடக்கியும் சேர்த்தும்
அவற்றைப்
படுத்தலும் அவ்விருவருக்கும் உரிய பாற்கிளவி எனமுடிக்க.
‘அவர்அவர்’
என்கின்றார், அகத்திணையியலுள் பலராகக் கூறிய
தலைவரையும்
தலைவியரையும். ‘இருவர்’ என்றதும் அவர் என்னும் சுட்டு.
நெஞ்சு என்னும்
அஃறிணை ஒருமையைத் தெரிய விளங்கத் தலைவன்
கூறும்வழி உயர்திணை
ஆண்பாலாகவும் தலைவி கூறும் வழி உயர்திணைப்
பெண்பாலாகவும்
அவற்றைத் தம்போலச் சேர்த்திக் கூறுபடுத்து உயர்திணை
முப்பால்
ஆக்கியும் கூறுப என்று வழு அமைத்தார்.
'இருவகை நிலைக்களத்து எட்டனையும் சேர்க்கப் பதினாறாம்;
அவற்றை நெஞ்சொடு சேர்க்கப் பலவாம் என்று உணர்க.’
தொல். பொ. 196. நச்
இலக்கணத்தின் பக்கச்சொல்-வழுவமைதி.
இன்பம் இடையீடுபடுதலை அறிந்து அதன் இன்னாமையைக் கருதிச்
சான்றோர் இல்வாழ்க்கையைப் பொருந்துதலை நீத்தார் என்ற பகுதியில்,
இடை என்பது இடையீடு என்ற பொருளில் வந்துள்ளது. |