|
‘அவர் நெஞ்சு’-
தலைவன் தலைவியை அருமைசெய்து அயர்த்தானாகத் தலைவி
தன்நெஞ்சு
தன் கூற்றைக் கேட்பதுபோலக் கற்பனை செய்து ‘நெஞ்சே!
தலைவனுடைய
நெஞ்சு அவன் பக்கலிலேயே இருந்து அவன் செயல்களில்
ஈடுபடுகிறதே!
என் நெஞ்சமாகிய நீ என் பக்கல் இல்லாது அவன் பக்கல்
சேரக் காரணம்
என்ன?’ என்று பிரிவுத்துன்ப மெலிவு பற்றி நெஞ்சொடு
சொற்றவாறு.
ஒருசிறை நெஞ்சமொடு உசாவுங்காலை
உரியது ஆகலும் உண்டு என மொழிப.
தொ. பொ. 204 ந.
என்பது இதற்குச் சிறப்புவிதி.
‘கானலும் கழறாது’-
இப்பாடல் காமம் இடையீடுபட்டகாலை, தலைவி நண்டினைத் தூது
விடுதற்குத் துணிந்து பேசியது.
"கடற்கரைச் சோலையோ, உப்பங் கழியோ, வண்டொலிக்கும்
நறுமலர்ப் புன்னையோ என் துயரம் பற்றித் தூதுபேசும் வாய்ப்பு இல்லை.
உன்னைத்
தவிர வேறு உறுதி செய்வார் யாரும் இல்லை. கழிகளில் மலர்ந்த
நெய்தல்
மலரது மணத்தை அமுதமாக விரும்பி அதன் மகரந்தத்தை ஊதிய
வண்டினம், களிப்போடு பறந்து திரியும் என் தலைவனிடத்து, "சிறுகாக்கை
பெடையோடு தான் பகலில் உண்ட இறாமீன்களையே இரவில் அமைதியாகக்
கனவுகாணும் செறிந்த நடுஇரவில், நின் மிக்க துன்பத்தைப் போக்கிய
தலைவி இப்பொழுது தனித்து இருந்து தன் மிக்க துயரைப் போக்கிக்
கொள்ளற்கு வல்லளோ? என்று
நீயே தூதுசொல்லுதல் வேண்டும்." -
எடுத்துக்காட்டில் தூதுச்செய்தி குறிக்கப்படவில்லை; அதனையும்
கோடல்வேண்டும்.
|