‘பல்கால், கைதையம் படுசினை
எவ்வமொடு அசாஅம்
கடல்சிறு காக்கை காமர் பெடையொடு
வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்து
நின்உறு விழுமம் களைந்தோள்
தன்உறு விழுமம் நீந்துமோ எனவே’
அகநா. 170
என்ற பகுதியையும் கொள்க.
‘பாய்திரை’-
"பரவிய அலைகள் ஒலித்தல் நீங்காத பரவிய நீரை உடைய குளிர்ந்த
கடலை! ‘தலைவன் எமக்குப் பற்றுக்கோடு இல்லையாம்படி
துறந்துவிட்டானே’
என்று அவனால் ஏற்பட்ட காமநோய் வெதுப்புதலான்
வருந்துவாரது துயரம்
கண்டு நீ வருந்தி ஒலிக்கின்றாயா? அல்லது
எம்மைப்போல உன்மாட்டுக்
காதல் செய்து பின் பிரிந்தவர் உனக்கும்
உளரா?"
இது கடல்படும் துன்பத்தைத் தன்னை ஒத்த துன்பமாகக் கருதித்
தலைவி கூறியது.
‘ஓங்கு எழில்கொம்பர்’-
கொடியைத் தலைவியின் இடை என்று தழுவி, காந்தளை அவளது கை
என்று விரும்பி, கருவிளையைக் கண் என்று கைக்கொண்டு, மாந்தளிரை
அவளது மேனி என்று தடவி, மயிலை அவளது சாயல் என்று பின்சென்று
கண்டு மகிழ்ந்து, மூங்கிலை அவளது தோள் என்று கருதித் தொட்டு,
கருமணலை அவளது நெளிவுடைய மயிர்முடி என்று பற்றி முல்லையை,
அவளுடைய பற்கள் என்று தலைவன் கருதினான் - என்று உபமானங்களை
உபமேயமாகவே தடுமாறிக் கொண்டமை காண்க.
உடமேயம் வேறு உபமானம் வேறு என்ற மனநிலை இல்லாது,
உபமானத்தையே உபமேயமாகக் கொண்டது காமத்துக் கன்றிய அறிவான்
நிகழ்ந்தது. உபமானத்தை |