பக்கம் எண் :

748இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

என
 

    எனவே, இயற்கைப்புணர்ச்சி வன்புறை முதலிய கிளவித் தொகைகளே
ஈண்டு இடம் எனப்பட்டன என்பதாயிற்று. இது வினைசெய் இடம். நிலம்
முதலாயின முன்னர்த் திணை எனப்பட்டனவாம். காலம் முன்னர்ச்
சொல்லுப.

202

விளக்கம்


    இந்நூற்பா தொல்காப்பியப் பொருட்படல 513-ஆம் நூற்பாவாகும்.
இதன்உரை அந்நூற்பாவின் பேராசிரியர் உரையையே பெரும்பாலும் ஒட்டி
வரையப்பட்டுள்ளது. பேராசிரியர் எடுத்துக்காட்டும் தந்து விளக்குகிறார்.

     எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
     புலவர் தோழ கேளாய் அத்தை
     மாக்கடல் நடுவண் எண்னாள் பக்கத்து
     நெடுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
     கதுப்புஅயல் விளங்கும் சிறுநுதல்
     புதுக்கோள் யானையின் பிணித்தன்றால் எம்மே
.

குறுந். 129

என்னும் பாட்டும்,

    கேளிர் வாழியோ கேளிர் நாளும்என்
    நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சில் ஓதி
    பெருந்தோள் குறுமகள் சிறுமெல் ஆகம்
    ஒருநாள் புணரப் புணரின்
    அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே.

குறுந். 280


என்னும் பாட்டும் பாங்கற்கூட்டமே இடனாக ஒருவழிப்பட்டன; என்னை?
‘நின் வேறுபாடு எற்றினான் ஆயிற்று?’ என்று வினவிய பாங்கற்கு ‘இதனின்
ஆயிற்று’ என்று உரைத்ததூஉம், அதற்குப் பாங்கன் கழறினானை
எதிர்மறுத்ததூஉம் என இரண்டும் பாங்கற் கூட்டத்துப்பட்டு ஓரியலான்
முடிந்தன.

தொல். பொ. 513 பேரா