இஃது ஏழாம் எண்ணும் முறைமைக்கண்
நின்ற பயன் இவ்வியல்பிற்று
என்கின்றது.
(இ-ள்) இது மிகவும் பயக்கும் இதனான் எனத்தொகுத்துச்
சொல்லப்படும் பொருள் பயன் என்னும்
உறுப்பாம் என்றவாறு.
மாறாக் காதலர் மலைமறந் தனரே
ஆறாக் கட்பனி வரல்ஆ னாவே
வேறா மென்தோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழியான் வாழு மாறே.
என்னும் பாடல் தோழி தூதுவிடுவாளாதல் பயன்பட வந்தது.
இவ்வாறே எல்லாப்பாட்டும் பயன்
உறுப்பாக அன்றி வாரா எனக்கொள்க.
204
விளக்கம்
இந்நூற்பாத் தொல். பொ. 515; உரைவிளக்கம் பேராசிரியருடையது.
‘மாறாக்காதலர்’-
‘தோழி! தலைவர் நம் மலைக்கண்வந்து நம்மைக் கூடுதலை
மறந்தாராக,
அதனால் கண்கள் ஆறுபோல நீர் உகுக்கத் தோள் வளைகள்
நெகிழத்
தொடங்கிவிட்டன ஆதலின், யான் வாழும் வழியை நீ கூறாய்’
என்று
தலைவி கூறுதலின் பயன் தோழி தூதுவிடல் வேண்டும் என்பதைக்
குறிப்பால் உணர்த்துதலாம்.
இவ்வாறு ஒவ்வொருபாடலும் கூற்றானோ
குறிப்பானோ ஒருபயன் உடையதாகியே வரும் என்பது.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்--
தொல். பொ. 515
‘இப்பொருள் பயக்கும்இஃது என்பது பயனே.’
ந. அ. 229
204 |