யின். தான் இளிவந்துபிறிது
ஒரு பொருளை வியக்குமாதலின், இளிவரலின்
பின் வியப்பு வைத்தான். வியப்புப் பற்றியும் அச்சம் பிறத்தலின், அச்சத்தை
அதன்பின் வைத்தான். அச்சத்திற்கு மறுதலையாகிய வீரத்தை அதன்பின்
வைத்தான். அவ்வீரத்தின் பயனாகிப் பிறக்கும் வெகுளியை அதன்பின்னே
வைத்தான். வெகுளிக்கு மறுதலை ஆகலானும், எல்லாவற்றினும் ஈண்டு
ஓதல்
சிறந்தது ஆகலானும் முதற்கண் ஓதிய நகைக்கு இயைபு உடைத்து
ஆகலானும் உவகையை ஈற்றுக் கண் வைத்தான் என்பது' என்று காரணம்
காட்டியுள்ளார்.
வடமொழியில் நாட்டிய நூல் செய்த பரதமுனிவர் கருத்தே
தொல்காப்பியர்
கொண்டு, மெய்ப்பாடு எட்டு என்று ஓதியதனையே
இவ்வாசிரியரும்
கைக்கொண்டார் என்பது.
நகை முதலிய எட்டும் வடமொழியில் முறையே ஹாஸ்யம், சோகம்,
ஜுஹுப்ஸை, விஸ்மயம், பயம், வீரம், ரௌத்ரம், சிருங்காரம் என்று
கூறப்படும்.]
மற்று இவ்வெட்டனோடும் சமநிலைகூட்டி ஒன்பது என்னாமோ
நாடகநூலுள்
போல எனின், அதற்கு ஒரு விகாரம் இன்மையின் ஈண்டுக்
கூறிற்றிலன்
என்பது. அதற்கு விகாரம் உண்டு எனின், முன்னை
எட்டினுள்ளும் சார்த்திக்
கொள்ளப்படும்; அல்லதூஉம் அஃது உலகியல்
நீங்கினார் பெற்றி ஆகலின்
ஈண்டு உலக வழக்கினுள் சொல்லற்பாற்று
அன்று என்பது.
விளக்கம்
சமநிலை என்பது இன்பத்தையும்
துன்பத்தையும் ஒன்றாகக்
கருதும்நிலை.
அது பொதுமக்களிடத்துக் காணப்படுவது ஒன்று அன்று.
சமநிலையில்
உள்ளாரிடம் எந்தவித மெய்ப்பாடும் காணப்படாமையின்,
அதனைப்பற்றிக்
கூறு
96 |