தல் மெய்ப்பாட்டிற்குப்
பெரும்பயன் இன்று. இன்பக்காலத்தில் ஒருவன்
இன்புறாது இருப்பதும், துன்பக்காலத்தில் துன்புறாதிருப்பதும் காண்பாருக்கு
நகையும் மருட்கையும் போல்வன பயக்கும் மெய்ப்பாட்டுப் பொருளாகும்.
சமிநிலை உலகியல் நீங்கினாரது பெற்றி எனினும், அவ்வப்போது சான்றோர்
வாழ்க்கையில் காணப்படும் என்பதனைச் சான்றோர்தம்
தொடர்நிலைச்செய்யுளகத்துக் காணலாம்
‘சீவகனிடத்துச் சமநிலை'-
‘விலங்கிவில் உமிழும் பூணான்விழுச்சிறைப் பட்ட போழ்தும்
அலங்கல்அந் தாரி னான்வந்து அஞ்சிறை விடுத்த போழ்தும்
புலம்பலும் மகிழ்வும் நெஞ்சில் பொலிதலும் இன்றிப் பொன்ஆர்ந்து
உலங்கலந்துஉயர்ந்ததோளான்ஊழ்வினைஎன்றுவிட்டான்,'
எனத் திருத்தக்கதேவரால் சுட்டப்பெற்றுள்ளது.
சீவக. 1174
‘மெய்த்தி ருப்பதம் மேவுஎன்ற போதினும்
இத்தி ருத்துறந்து ஏகுஎன்ற போதினும்
சித்தி ரத்தின் அலர்ந்தசெந் தாமரை
ஒத்தி ருந்த முகத்தினை உள்ளுவாள்.'
இரா.சுந். 3-20
என்று இராகவனைப்பற்றிக்
கம்பரும்,
‘நாட்டிடை எல்லை பொற்றாள் நறுமலர் சிவப்ப ஏகிக்
காட்டிடைப்புகுவதும்போதும்கலக்கம்அற்றுஉவகைகூர்ந்தான்
கூட்டிடைஇன்ப துன்பக் கொழும்பயன் துய்த்து மாறி
வீட்டிடைப் புகுதும்போது மெய்ம்மகிழ் விபுதர் போல்வான்.'
வில்லி பா. சபா. சூது 280
என்று தருமனைப்பற்றி
வில்லிபுத்தூராரும் உரைத்தமை காண்க. சமநிலை-சாந்தம்.]
சத்துவமும் குறிப்பும் சுவையும் என்னும் மூன்றற்கும் முதற்கண்ண
ஆகலான்
அம் மூன்றனையும் அடக்கிய பொருட் பகுதியைப் ‘புல்லித்
தோன்றும்
பொருள் வகை' |