|
‘தலைவன் இல்வந்து நின்றவனைக்
கண்ட அன்னை என்முகத்தை
நோக்கிக்
களவுஒழுக்கத்தை அறிந்து ‘நீ நல்லை’ என்று சிரித்துக்கொண்டு
சென்றாள்’
என்றகருத்தில் தன்னைத் தன்மகள் எள்ளிக் களவுஒழுக்கம்
நிக்ழ்த்தியது
காரணமாகச் செலிலிக்கு நகை பிறந்தது, பிறர் எள்ளியது
பொருளாகப்
பிறந்த நகையாம்.
‘நடுங்குதல் காண்மார் நகை குறித்தனரே’-
தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாள்
ஆகியதலைமகன்,‘யான்
நும்மோடு போதுவல்’ என்றாட்குத் தலைமகன்
அவளது
மென்மையும்
காட்டின் கடுமையும் கூறி உடன்படானாக,
ஆற்றாளாகிய
தலைமகளைத்
தோழி ‘அவர் நம்மோடு நனையாடிச்
சொன்னார்; பிரிவார்
அல்லர்’ எனவற்புறுத்திய பாடற் பகுதிஇது.
‘தலைவன் தான் உன்னைவிட்டுப் பிரிவதாகக் கூறின்
பெருவனப்பினளாகிய
நீ மெய் நடுங்குவாய். அந்நடுக்கமும் காண்டற்கு
இனிதாயிருக்கும்.
அதனைக்காணவே ஒரு விளையாட்டைக் குறித்துச்
சொன்னான்’ என்ற
கருத்தில், தலைவன் தன் இளமையால் தலைவியோடு
நகையாடல்
பெறப்பட்டது.
‘நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்’-
பரத்தையிற் பிரிந்த தலைவன் தன்மகனையே வாயிலாகக் கொண்டு
புக்கதைத் தலைவி தோழிக்குச் சொல்லிய பாடற் பகுதிஇது.
தன் புதல்வனுடைய மழலைச்சொற்கள் கேட்டார்க்கு எல்லாம்
சிரிப்பைத்
தரும் என்றலின், இது பிறர் இளமைப் பொருட்டாகிய நகையாம்.] |