பக்கம் எண் :

அகத்திணையியல்--நூற்பா எண் 206767

 

‘நகை நீ கேளாய் தோழி’-

   இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகத் தலைமகட்குச்சொல்லுவாளாய்த்
தலைமகன் கேட்பத் தோழி சொல்லிய பாடற்பகுதி இது.

   தலைவனை இரவுக்குறிக்கண் செவிலிகண்டு அது காரணமாகத் தாய்
தன்னை வெகுள, தக்கவாறு இரவுக்குறி அமைக்காது களவு வெளிப்படக்
காரணமாயின தன் பேதைமை குறித்துத் தோழிக்கு நகை பிறந்தவாறு.

‘நகை ஆகின்றே தோழி ... ... ... நின்றதுவே’-

    பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன்மனைக்கு வந்தானாகத்
தோழிக்குத் தலைவி சொல்லிய பாடற்பகுதி இது.

    ‘தலைவனுக்குப் புதுப்பரத்தையைக் காட்டுவிக்கச் சென்ற பாணன்,
தெருவில் தன்னை மாடு முட்ட வந்ததாக, யாழை விட்டுவிட்டுப் பக்கத்தில்
இருந்த வீட்டிற்குள் நுழைய, அவ்வீடு நம் வீடாக இருந்துவிட்டது’ என்ற
கூற்றின்கண், அறியாமையால் பாணன் நம்வீட்டிற்குள் நுழைந்துவிட்ட
செய்தி நமக்குச் சிரிப்பைத் தருகிறது’ என்ற பகுதியில், பிறன் பேதைமை
காரணமாக நகை பிறந்தவாறு.

    ‘நும்மொடு நக்க வால்வெள் எயிறே’-

       தோழி வரைவு நீட்டித்தவழி, தலைவி வரைவுகடாய பாடற் பகுதி
இது. ‘எம்உயிர், பாணர் பச்சைமீனை இட்டு வைத்த கலம்போல எமக்கு
வெறுப்பைத் தருவதாய், உம்மையும் பெறேமாய் அழிக. உம்மோடு சிரித்த
எம்பற்கள் மலையைக் குத்திய யானைக்கொம்புபோல விரைவாக முறிக’
என்ற செய்தியில், தலைவனை உள்ளவாறு அறியாமல் தன்மடம் காரணமாக
அவனோடு சிரித்தமை சுட்டப்பட்டது.

      ‘நாம் நகை உடையம் நெஞ்சே ... ... ...நம்மொடு
      தான்வரும் என்ப தடமென் தோளி.’--