|
அவள்பால் சென்று அவள்
ஊடலை அவன் தணிப்பானாக-எனவும் கூறும்
இப்பகுதியில் தலைவன் தன்னை இகழ்ந்து வேற்றவர் தொடர்பு கொண்டமை
காரணமாகப் பரத்தைக்கு அழுகை தோன்றியவாறு.
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்
பொருள் நாட்டத்தான் தோழி தலைவியின் களவொழுக்கத்தினை அறிந்த
‘கயமலர்
உண்கணாய்’ என்ற பாடற்பகுதிகள்,
‘சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்’
‘தான் உற்றநோய் உரைக்கல்லான் பெயரும்மன் பன்னாளும்’
என்பன.
‘தலைவன் யானை முதலியவை சென்ற சுவட்டைத் தேடி
வருவான்போலக்
கண்ணியனாய் வில்லனாய் வரும்; என்னை நோக்கிக்
குறிப்பால் தன்கருத்தை
உணர்த்துவானேயன்றி, வெளிப்படையாக ஏதும்
கூறாமல் பலநாளும்வந்து
செல்லும் அவன் அவலம் கண்டு உறக்கமின்றி
யானும் வருந்துகிறேன்’ என்ற
தோழி கூற்றில், தலைவன் தன்பெருமைக்கு
ஏலாது தாழ்ந்து வருதல்
காரணமாகத் தோழிக்குத் துயரம் ஏற்பட்டது. இது
பிறன் இளிவுபற்றிய
அழுகையாம்.
‘மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே’-
தும்பிசொகினனார் பாடிய தாபதநிலைப் பாடல் பகுதிஇது. இதன்கண்,
நேற்றுவரை பலரோடும் சேர்ந்து உண்ட வீரன் இறந்தானாக, இன்று
அவன்மனைவி அவனுக்கு உணவு கொடுத்தல் வேண்டிச் சிறிய இடத்தைத்
தன் கண்ணீராலேயே சாணாகம் இட்டு மெழுகிப் பிண்டம் வைக்கும் நிலை
ஏற்பட்டது-என்றபகுதியில், கணவனைத் தான் இழந்த இழவு பற்றித்
தலைவிக்கு அழுகை பிறந்தவாறு. |