பக்கம் எண் :

772இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

    ‘அணங்குறு கற்பொடு ... ... ... யானும்’-

    தலைவன் பொருள்வயின் பிரிந்தபோது குறித்த பருவ வரவுகண்டு
அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லிய பாடற் பகுதிஇது.

     ‘தலைவன் பிரிவான் என்று நீ வருந்தும் நிலை மட்டும் இல்லை;


     ‘பிரிதல்துன்பம் தாக்குதலாலே நின் உடல்நிலை என்ன ஆகுமோ?’
என்று உன் துயருக்கு யானும் வருந்துகிறேன்’’ என்று தோழி கூறிய
இப்பகுதியில், தலைவியின் இன்பஇழவு காரணமாகத் தோழிக்கு அழுகை
பிறந்தவாறு.

     ‘துளியிடை ... ... ... துஞ்சேன்’-

      மடல் ஏறுகின்ற தலைவன் சான்றோருக்குக் கூறும் பாடல் பகுதி
இது. இதன்கண், ‘ஒருத்தி மயங்கின மழைக்கு நடுவில் மின்போல வந்து
தோன்றித் தன் ஒளியோடு தன் உருவையும் என்னைக் காணப்பண்ணி
என்னை அளிக்குந் தன்மையளாய் அளித்துப் பின்னர் என் நெஞ்சைத்தான்
வரும் வழியாகக் கொண்டு விட்டாள்’ என்ற இப்பகுதியில், அத்துயரத்தால்
தலைவன் உறக்கம் நீத்ததாகக் கூறும் செய்தி தன்கண் அசைவு பற்றித்
தோன்றிய அழுகையாம்.

    ‘இல்வழங்கு ... ... முன்னே’-

     மாற்பித்தியார் பாடிய தாபதவாகைப் பாடற்பகுதி இது, இதன்கண்,
‘தன் மனைவியை வசீகரித்த சொல்லாகிய வலை வீசும் வேட்டுவனாக முன்பு
இருந்தவன், இன்று இல்வாழ்க்கையை விடுத்துப் பலகாலும் அருவியில்
மூழ்குதலால் பண்டை ஒளிகெட்டுத் தில்லந்தளிர் போன்ற பொலிவற்ற
சடையோடு செறிந்த இலையை உடைய தாளியை உணவுக்குப்
பறிக்கின்றான்’ என்ற கருத்தில், அத்தாபதன் பழைய நிலைநீங்கி வருந்தும்
நிலைகண்டு காண்பாருக்கு ஏற்படும் அவலம், பிறன் அசைவு பொருளாக
ஏற்பட்டவாறு.