|
‘மூத்து .... .... நாணுதல்'--
வீரன் ஒருவன், வீரன் மற்றொருவன் தனது மூப்பினால் மேல்நோக்கும்
தலை
தாழ்ந்து நின்ற நிலையைச் சுட்டி, அவனைத் தனக்கு நிகராகக்
கருதாது
அவனோடு போரிடற்கு நாணுதலைக் குறித்தமையின், இது
பிறன்கண்
தோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தவாறு.
‘இமயமும் .... ....எவனோ'--
தலைமகன் இரவுக்குறி வந்துழி அவன் கேட்பத் தோழிக்குச்
சொல்லுவாளாய்த் தலைமகள் சொற்றபாடற்பகுதி இது.
‘காற்றோடு கலந்து வந்த நிறைந்த நீரை உடைய கார்மேகமே! உனக்கு
இப்பொழுது கருணை இல்லையோ? இமயமலையையும் அசைக்கும் தன்மை
உடையை நீ. உன்னால் அலைக்கப்படும் மகளிர் துணைவரைப் பெற்றிலர்,
ஆதலின் அன்னார் இரங்கத்தக்கார். நீ இங்ஙனம் பெய்து துன்புறுத்தல்
எதன்பொருட்டு?' என்று தலைவி தன்கண் தோன்றிய காமப்பிணி பற்றிய
இளிவரல் சொற்றவாறு.
‘குணகடல் .... .... நோய்ப்பா லோயே'--
அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச்
சொல்லிய
பாடல் இது. இதன்கண் நெஞ்சைப் பிரித்துத் தன் முன் வேற்றவர்
போல நிறுத்தி, ‘கீழ்க்கடற்கரையிலுள்ள சிறகுகள் அற்ற நாரை
மேல்கடற்கரைக்கண்
உள்ள சேரனுடைய ஊராகிய தொண்டியில் கிடைக்கும்
அயிரைமீனை
இரையாகக் கோடற்கு ஆசைப்படுவது போல, நமக்குச்
சேயளாகவும்
கிடைத்தற்கு அரியளாகவும் இருக்கும் தலைவியை அடைய
நினைக்கும் நீ
என்றும் துன்புறுவாய்' என்ற கருத்தில் நெஞ்சத்தில் ஏற்பட்ட
காமப்
பிணிபற்றித் தலைவன் வருந்துதல், பிறன்கண் தோன்றிய பிணி
பொருளாக
இளிவரல் பிறந்தவாறு. |