|
‘யான் தன் .... .... மகளே'--
தோழியை இரந்து பின்நின்ற கிழவன் தனது குறை அறியக் கூறிய
பாடல்
பகுதி இது.
‘முலைமுகம் செய்யத் தலைமயிர் நீண்டு வளர, பற்கள் விழுந்து
முளைத்து
விட்டனவாக, தேமலும் சிலவாகத் தோன்றினவாகத் தலைவி
என்னை
வருந்துதலால் யான் அவளை அறிவேன். அவள் அதனை
அறிந்திலள்.
செல்வர் மகளாகிய அவள் எத்தன்மை உடையளோ?' என்ற
பாடலில்
தலைவியால் தலைவன் துன்புறுதல் தன்கண் தோன்றிய வருத்தம்
பற்றிய
இளிவரலாம். வருத்தம் என்பதற்கு முயற்சி என்று பொருள்
செய்தவர்,
ஈண்டுத் துன்பம் என்ற பொருளில் எடுத்துக்காட்டு வழங்கி
இருப்பினும்,
இத்துன்பம் பின் முயற்சிக்கு அடிகோலுவது உளம்கொளத்
தக்கது.
‘ஒன்று இரப்பான் ..... .... சொல்லும்'--
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி, அவன் தன்மையும் அவன்
தனக்குக்
கூறுவனவும் அக் கூற்றுத் தன்னால் பொறுக்க ஒண்ணாதவாறும்
அவன்
கருத்தும் தலைவிக்குக் கூறி, அவன் குறை நயப்பத் தன்னுள்ளே
கூறிய
பாடற்பகுதி இது.
‘மேம்பட்ட தலைவன் தன் தகுதிக்கு மாறாக ஒன்றனைப் பிச்சை
கேட்க
வருவோரைப் போலப் பிறரால் இகழப்பட்டு எளியனாம்தன்மை
தோன்றச்
சில கூறுகிறான்' என்று கூறித் தோழி தலைவியைக் குறை
நயப்பித்தலின்,
தலைவன்கண் தோன்றிய வருத்தம் பற்றித் தோழிக்கு
இளிவரல் பிறந்தவாறு.
‘வலியர்என வழிமொழியலன்
மெலியர்என மீக்கூறலன்'
98 |