|
‘நிலத்தினும் பெரிதே’ --
தலைவன் சிறைப்புறமாக அவன் வரைந்துகொள்வது வேண்டித் தோழி
இயற்பழித்தவழித் தலைவி
இயற்பட மொழிந்த இப்பாடலில் தலைவன்
நட்பின் திறம் தன்கண்வளர்ந்த பெருமைபற்றித்
தலைவியிடம் மருட்கை
காணப்படுகிறது. தலைவி தலைவனோடு கொண்ட நட்பின் திறம் அவன்கண்
வளர்ந்த பெருமை பற்றிய மருட்கையாம்.
’மைம்மலர் .... .. இல்’ --
‘கரிய பூச்சூடிய மயிர்முடியினை உடையாளுடைய திரண்ட தேமல்
படர்ந்த நகில்களைத் தான் தாங்கி
இருப்பினும், கடை சிவந்த
கருங்கண்ணளாகிய அவளது
இடையை விடச் சிறிய பொருள் பிறிது
ஒன்றும்
இல்லை’ என்ற இப்பாடலில், இடையாகிய பிறபொருட்கண்
தோன்றிய சிறுமைபற்றி மருட்கை
பிறந்தவாறு.
தன்கண் தோன்றிய சிறுமைக்கு எடுத்துக் காட்டுத் தரப்படவில்லை,
‘எருமை .... .... பெரும’ --
‘சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ் சேரல்
இரும்பொறையைக்
கண்டஞான்று நின் உடம்பு பெறுவாயாக’ எனச் சென்று
கண்டு தம் உடம்பு
பெற்ற நரி வெரூஉத்தலையார் பாடிய இப்பாடலில், தம்
உடம்பு
பண்டைநிலை அடைந்தது பற்றிய மருட்கையோடு அரசனைக்
‘கானக நாடனை நீயோ ?’
என்று வினவிய அப்புலவரிடம் தம்கண்
தோன்றிய
ஆக்கம் பற்றிய மருட்கைக் குறிப்புப் புலப்பட்டவாறு.
‘உறக்கும் .... .... ஆங்கு’
சிறிய ஆலம்விதை பெரிய மரமாகிச் சிறந்த பரந்த நிழலை அளிப்பது
பிறபொருட்கண்தோன்றிய
ஆக்கம்பற்றிய மருட்கையாம்.
|