|
‘ஆர்வ வேர் அறுத்து அச்ச
ணந்திபோய்
வீரன் தாளிணை விளங்க நோற்றபின்.’
சிந்தா. 409
என வீரன் எனவும்,
சிவனடியார்களைச் சேக்கிழார் பெருமான்,
‘ஈர மனத்தினர் யாதும் குறைவுஇலர்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ’
பெரிய. 4-9
என வீரர் எனவும் குறிப்பிடுவது காண்க.
‘வல்லார் .... .... காட்டியவள்’--
‘வழுவின சொற்கள் சொல்லாதபடி தெள்ளிய நாவினாலே வார்த்தை
சொல்ல
வல்லேனாகிய என்னைப் பிறர் முன்னே ஒன்றையும் கல்லாத
தன்மையனாக்
காட்டியவள் ’-- என்ற இப்பகுதி, இரந்து பின்நின்ற
தலைவன் மடல்
ஏறியவழித் தலைவிதமர் அஞ்சி அவளைக் கொண்டுவந்து
கொடுத்தலைக்
கண்டோர் கூறிய பாடலின் பகுதியாகும். இதன்கண்
‘வடிநாவின் வல்லார்
முன் சொலல் வல்லேன்’ என்ற பகுதி தலைவன்
கல்விப் பொருட்டாய
பெருமிதத்தோடு இருந்ததைச் சுட்டுகிறது,
‘போருள் அடல்மா .... .... படர்வித்தவள் ’--
இதுவும் மேலைப் பாடற்பகுதியாம். ‘போரிடத்து வெற்றியினை உடைய
குதிரைமேலே இருந்து போர்த்தொழில் நடத்துவேன் ஆகிய என்னை,
அம்மா அல்லாத மடல்மாவிலே ஏறி, அக்களத்தே அன்றி மன்றின்கண்ணே,
தன்னை நினைக்கச் செய்தவள்’ என்ற இதன்கண்,’போருள், அடல் மாமேல்
ஆற்றுவேன்’ என்பது தலைவன் தன்கண்தோன்றிய தறுகண் பொருட்டாய
பெருமிதத்தோடு இருந்ததனைச் சுட்டுகிறது. |