|
உண்டாகும் பொருள்தான் இவ்வின்பம்
என்று கூறுகின்றவனே’ என்ற
இப்பகுதியில், இன்பம் நுகர்வதற்குச் செல்வம் நிலைக்களம் என்பது
குறிப்பிடப்பட்டவாறு.
‘நன்கலம் பெற்ற’--
நல்ல அணிகலன்களைப் பெறுதலான் ஏற்படும் உவகையும்
செல்வம் நிலைக்களனாகப் பிறந்த
உவகையாம்.
‘பெண்டிர் .... .... மலை’--
தோழியும் தலைமகளும் தலைமகனது மலையை வாழ்த்திப்
பாடுகின்ற
வள்ளைப்பாட்டில், தோழி இயற்பட மொழயத் தலைவி இயல்
பழித்தமையைத் தலைமகன் சிறைப்புறமாகக் கேட்டு வரைய வருகின்றமை
தோழிதலைமகட்கு உணர்த்தும் பாடற் பகுதி இது. தலைவி தலைவனை
இயற்பழித்து உரைக்கும் இப்பகுதியில், தலைவன் மலை ‘பெண்டிருடைய
நலத்தை நுகர்ந்து தண்ணிய மலைச்சாரல் இடத்துத் தாதை உண்ணும்
வண்டு
அப்பூவைத் துறக்குமாறு போல அவரைத் துறக்கின்றவன் மலை ‘-
என்ற
பகுதியில், பூமலரும் செவ்வியைப் பார்க்கும் அறிவு வண்டிற்கு
இருப்பது
போலத் தாம் விரும்பும் மகளிரின் முறுவற் குறிப்பு உணரும்
அறிவு
காமத்திற்கு ஏதுவாகும் என்பது ‘தண் சாரல் தாது உண்ணும்
வண்டின்,
பெண்டிர் நலம் வௌவுதல்’ என்னுமிடத்து
உணர்த்தப்பட்டுள்ளது.
‘முகைப்பதம் பார்க்கும் வண்டினம் போலத்
தகைப்பருங் காமத்துத் தாம்வீழ் மகளிர்
நகைப்பதம் பார்க்கும் நனிநாக ரிகத்து
நகர நம்பியர்’
என்ற பெருங்கதை அடிகளையும்,
(உஞ்சை 35 : 212-214)
100 |