பக்கம் எண் :

794இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

      ‘தவத்தோ ராயினும் தகைமலர் வண்டின்
      நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும்’

(14-162,163)

என்ற சிலப்பதிகார அடிகளையும் நோக்குக.

‘இகலர்.... .... காண்பாம்’--

       ‘நீங்குதலில்லாத சிறந்த கேள்விஅறிவும் பண்பாடும் உடைய
சான்றோர்கள் மாறுபாடின்றி அறிவின் கூர்மையோடு தம்முள் கூடி அறிவுச்
செய்திகள் பேசி நகையாடும் இன்பம், தேவர் உலக இன்பத்தினும்
மேதக்கது’ என்ற இப்பாடலில், அறிவின் பயணாகிய இன்பம் புலப்படுமாறு
விளக்கப்பட்டுள்ளது.

‘தொடிக்கண் .... .... மொழிந்தே’ --

      இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன்நெஞ்சிற்குச் சொல்லிய பாடற் பகுதி இது

     ‘நெஞ்சே! தலைவி, இரவுக்குறி பிறழாமை, ஒலியாதபடி தன்
வளையல்களைக் கடுக்கி மீன் துஞ்சும் யாமத்து, உருவுகிளர் ஏர்வினைப்
பொலிந்த பாவை இயல் கற்றன்ன நடையினளாய் வந்து, யாழ் போல இனிய
சொற்பேசித் தன்வளைத்தழும்பு என்கண் உண்டாம்படி தழுவினாள்
ஆதலின், இனிப் பெரிதும் மகிழ்வாயாக’ - என்ற இப்பகுதியில், தலைமகள்
தன்னைக் கூடியமை காரணமாகத் தலைமகனுக்கு உவகை பிறந்தமை

சுட்டப்பட்டவாறு.

 ‘துயிலின்றி .... .... மன்னோ’

       பருவ வரவின்கண் ஆற்றாத தலைமகள் இறந்தது சிந்தித்து
‘நம்மாட்டு அன்பிலர் ஆயினும், இக்காலத்து இவ்வூரின்கண் பண்டு தாம்
விளையாடியவாறு நினைத்து வருவர், இக்கால வரவு சொல்லுவார்
உளராயின்’ எனக்கேட்ட