|
பாணன், பாசறைக்கண் சென்று
தலைமகனைக் கண்டு கூறிய பாடற்பகுதி
இது. ‘யாம் துயிலின்றி யாமக்கடலை நீந்த, தான் மயில் போலும் இயலினை
உடைய பரத்தையரை மருவுதலை நுகர்ந்து அவருடனே அழகிய
புனலைஉடைய மடுக்களை ஆடி, நம்மை மறந்து அவரிடத்தே தலைவன்
அமைந்திருப்பானே’ - என்று தலைவி கூறியதைப் பாணன் கொண்டெடுத்து
மொழிந்த இப்பகுதியில், பரத்தையரோடு கூடி விளையாடுதல்
நிலைக்களனாகத் தலைவனுக்கு உவகை பிறக்குமாறு குறிக்கப்பெற்றவாறு.
உவகை என்ற மெய்ப்பாட்டுக்கு நிலைக்களம் பிற பொருள்களேயாம்.
இவற்றால், நகை அழுகை இளிவரல் மருட்கை என்பன தன்கண்ணும்
பிறன்கண்ணும் தோன்றும் பொருள்களை நிலைக்களனாக உடையன
என்பதும், அச்சம் பிறபொருளை நிலைக்களனாகவும், பெருமிதம்
தன்னையே
நிலைக்களனாகவும், வெகுளியும் உவகையும் பிறபொருளை
நிலைக்களனாகவும் கொண்டு தோன்றும் என்பதும் உணரப்படும்.
பேராசிரியர் இவ்வெண்மெய்ப்பாட்டின்கண்ணும் மிகையால்
ஒவ்வொன்றற்கும்
நிலைக்களம் கொண்டாராக, இவர் அவற்றுள்
பெரும்பாலானவற்றை
விடுத்துச் சிலவே கொண்டுள்ளார். அவை
பின்வருமாறு.
‘உள்ளப்பட்ட நகை’
தொ.பொ.252 என்ற மிகையானே,
‘வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்’
அகநா,5
என்ற உள்ளத்தொடு பிறவாத நகையையும்,
‘விளிவில் கொள்கை’
தொ.பொ.
253 என்ற மிகையானே,
‘இன்ன விறலும் உளகொல் நமக்கென
மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக்
கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை’
புறநா. 19
என்ற உவகைக் கலுழ்ச்சியையும், |