என்றதனால் அடங்குதலின்
இச்சூத்திரம் வேண்டா எனின், அதனான்
மயங்கும் என்னும் துணை அல்லது அகப்பொருள் ஒழிபாய்ச் செய்யுட்கு
உறுப்பாம் என்னும் விசேடவிதி ஆண்டுப் பெறப்படாமையின், வேண்டும் என்பது என்க.
211
விளக்கம்
நூற்பா தொல். பொ. 521.
உரை பேராசிரியர் உரையைத் தழுவியது.
ஒவ்வொரு நிலத்திற்கும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள்
என்பன
வரையறுக்கப்பட்டுள்ளன. அங்ஙனம் வரையறுத்த வரையறையைக்
கடந்தும்
சான்றோர் சுவைபடல் கருதிச் செய்யுள் செய்தலும் உண்டு. அவை
தத்தம் திணையொடு வாராவாயினும்,
எத்திணை கருதிச் செய்யப்பட்டனவோ
அத்திணைப் பொருளாகக் கொள்ளத்தக்கன என்று வரையறுத்துக் கூறும்
அகப்பாட்டு உறுப்புத் துறை எனப்படும்.
‘ஊர்க்கால் நிவந்த’--
என்ற கலிப்பா காமம் சாலா இளமையோள் வயின் முதியவன் ஒருவன்
ஏமம்
சாலா இடும்பை எய்திக் கூறிய கைக்கிளைச் செய்யுள். இஃது அவன்
மனத்தால் புணர்ச்சியை வேண்டிய உரிப்பொருள் உடையது பற்றிக்
குறிஞ்சிக் கலியாயிற்று. இப்பாடலில் தலைவி ஞாழல் என்ற நெய்தல்
நிலப்பூவைச் சூடி மருத நிலத்துச் சோலையில் தலைவனால்
காணப்பட்டாளாகக் கூறப்படினும், தலைவன் அவளைக் கூடுதலை விரும்பிய
கருத்தான் குறிஞ்சிப் பாடலாக இது கொள்ளப்பட்டது. இங்ஙனம் பாடும்
வாய்ப்புப் புலவருக்கு வழங்கப்பட்டமையான், அவர் செயல் நேரிதே
என்பதைக் குறிக்கத்துறை என்ற உறுப்பு அமைக்கப்படல் வேண்டுவதாயிற்று.
|