ஓங்குயர் எழில்யானைக்
கனைகடாம் கமழ்நாற்றம்
ஆங்கவை விருந்தாற்றப் பகல்அல்கிக் கங்குலான்
வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர்
தேங்கமழ் கதுப்பினுள் அரும்பவிழ் நறுமுல்லைப்
பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதரம் மரீஇய
பூம்பொய்கை மறந்துள்ளாப் புனல்அணி நல்லூர!’
கலி. 66
இதனுள், வீங்குநீர் பரத்தையர்
சேரியாகவும், அதன் கண் வீழ்ந்த
நீலம்
காமச்செவ்வி நிகழ்ந்த பரத்தையராகவும், பகர்வர் பரத்தையரைத் தேர்
ஏற்றிக்கொண்டு வரும் பாணர் முதலிய வாயில்களாகவும், அம்மலரைச்
சூழ்ந்த வண்டு தலைவனாகவும், யானையின் கடாத்தை ஆண்டு உறைந்த
வண்டுகள் வந்த வண்டிற்கு விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற
சேரிப்பரத்தையர் தமது நலத்தை அத்தலைவனை நுகர்வித்தலாகவும்,
கங்குலில் வண்டு முல்லையை ஊதுதல் இற்பரத்தையருடன் இரவு
துயிலுதலாகவும், பண்டு மருவிய பொய்கையை மறத்தல் தலைவியை
மறத்தலாகவும் பொருள்தந்து ஆண்டுப் புலப்படக் கூறிய கருப்பொருள்கள்
புலப்படக் கூறாத மருதத்திணைப் பொருட்கு உள்ளுறை உவமமாய்க்
கேட்டோன் உள்ளத்தே விளங்கி நின்றவாறு காண்க. பிறவும் அன்ன. 214
விளக்கம்
உள்ளுறை உவமத்தில் உபமானமாகிய
கருப்பொருள்களே உண்டு.
அவையும்
தெய்வம் நீங்கலாகக் காணப்படும். அவ்வுவமானங்களைக்
கொண்டு
உபமேயமாகக் கவி கருதுகின்ற பொருள்களைத் தெளிந்த
அறிவினர்
உணர்தற்கு ஏதுவாகிய வாய்ப்பு அத்தொடரில் அமைந்திருக்கும்.
அஃது
அகத்திணையிலேயே வரும்; இன்பம் பற்றியும் துன்பம் பற்றியும்
வரும்; தலைவன் தலைவி தோழி செவிலி பாங்கன் பாணன்
என்பவராலேயே
கூறப்படும்.
|