பக்கம் எண் :

அகத்திணையியல்--நூற்பா எண் 214881

 

‘வீங்குநீர்’ --

      ‘நீரில் மலர்ந்த நீலப்பூக்களைப் பறித்துக்கொண்டு விலைக்கு விற்பார்
தலையில் சூடிய பூக்களில் தங்கி ஊருக்கு வந்துசேர்ந்த வண்டு, யானையின்
மதநீரில் முன்பு படிந்திருந்த வண்டுகளோடு மதநீரை உண்டு
பகலைக்கழித்து, இரவிலே கணவரோடு கூடியிருக்கும் மகளிர் சூடிய
முல்லைப் பூக்களில் படிந்து வேறுசில பூக்களை நுகரவேண்டும் என்ற
விருப்பம் இன்றி, தாம் பண்டு விரும்பின பூக்களை உடைய குளத்தை மறந்து
பின் ஒருகாலும் நினையாத நீர்வளம் மிக்க நல்ல ஊரனே!’

     இம் மருதக்கலித் தரவில் கூறப்பட்டுள்ள கருப்பொருள்களைக் கொண்டே கவி குறித்த உட்பொருள் இது என்பதனை நச்சினார்க்கினியர் உரைத்தவாறே இவரும் கூறியுள்ளார்.
 

 

உபமானம்

(வெளிப்பட இருப்பது)

உபமேயம்

(குறித்து உணரப்படுவது)

நீரில் மலர்ந்த நீலம்

பரத்தையர் சேரியில் வாழும் பரத்தையர்

பூ விற்பவர்

பரத்தையரைத் தேர்ஏற்றிக் கொண்டு
வரும் பாணர்

வண்டு

தலைவன்

யானைமதம்

சேரிப்பரத்தையர் நலம்

முல்லையை ஊதுதல்

இற்பரத்தையரை நுகர்தல்

பொய்கை

தலைவன் இல்லம்

பொய்கை மலர்

தலைவி

பொய்கையை மறத்தல்

தலைவன் தன் இல்லத்தை மறத்தல்

111