பக்கம் எண் :

890இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

சிறப்புடைய ஐந்திணைஇன்பத்துக்கு வழி கோலுதலின், அதுவும் சிறப்பிற்கு
வழி கோலும் சிறப்புடைக் கைக்கிளை ஆயிற்று. ஆகவே, அசுரம்-
ராக்கதம்-பைசாசம் என்ற மூன்றும், இயற்கைப்புணர்ச்சிக்கு வாய்ப்பு
இல்லாது ஒருவன் ஒருத்தியை விரும்பும் கைக்கிளை ஆதலின், சிறப்பு
உடையன அல்ல என்பது.

   இக் கைக்கிளைத் தலைவன், தன்னிடத்துக் குறை ஏதும் இலது
போலவும், தலைவி மாட்டும் அவள்தமர் மாட்டுமே குறை பல உண்டு
போலவும் பேசுவதனையே இன்பமாகக் கொண்டு நிறைவு எய்துபவன்.
இதனை அகப்புறக்கைக்கிளை என்னும் நம்பி அகப்பொருள்.

 ‘வாருறு வணர் ஐம்பால்’--

     ‘நன்கு சீவப்பட்ட கடைகுழன்ற மயிர்முடி, வளைந்த முன்கை, நெடிய
மெல்லிய தோள், மலர்கண்ணின் மான்பார்வை, கார்காலத் தளிர்மேனி,
ஒளிபெறும்நுதல், விழுந்தெழுந்த கூரிய பற்கள், விழுந்து எழாத
முல்லைமுகை போன்ற பற்கள், கொடிஇடை இவற்றை உடையையாய்ச்
சிலம்பு ஒலிப்பத் தொடி அணிந்த கைகளை வீசி என் உயிரைக் கைப்பற்றிக்
கொண்டு, அஃது அறிந்தும் மீண்டும் தாராமல் போகின்றவளே! யான்
கூறுவதனைக் கேட்பாயாக.

     ‘காம நோய் மிக யான் சிறிது உயிருடனே இருக்கும்படி என் உயிரைக் கைப்பற்றி இளமையான் உணராது செல்வோய்! உன் தவறு இல்லை ஆனாலும், காம நோய் செய்யும் உன் இயற்கை அழகுக்கு மேல் செயற்கை அழகைத் தம் செல்வச் செருக்கால் செய்து அனுப்பிய நுமர்மேல்
தவறு இல்லை என்று கூறல் இயலுமா?

     ஒழுக்கம் தேய்ந்து யான் மறதியை அடைய எனக்குக் காமநோயை
உறுத்தி, இளமையான் அதனை உணராது