பக்கம் எண் :

896இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

தௌ

     தெள்ளியேம் என்றுரைத்து, தேராது ஒருநிலையே
     வள்ளியை யாகென நெஞ்சை வலியுறீஇ,
     உள்ளி வருகுவர் கொல்லோ? உளைந்தியான்
     எள்ளி இருக்குவென் மன்கொலோ? நள்ளிருள்
     மாந்தர் கடிகொண்ட கங்குல் கனவினான்
     தோன்றினன் ஆகத், தொடுத்தேன்மன்; யான்தன்னைப்
     பையெனக் காண்கு விழிப்ப, யான் பற்றிய
     கையுளே மாய்ந்தான் கரந்து.

     கதிர்பகா ஞாயிறே! கல்சேர்தி யாயின்,
     அவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித்
     தருகுவை யாயின், தவிரும்; என் நெஞ்சத்து
     உயிர்திரியா மாட்டிய தீ.

     மையில் சுடரே! மலைசேர்தி நீயாயின்,
     பௌவநீர்த் தோன்றிப் பகல்செய்யும் மாத்திரை,
     கைவிளக் காகக் கதிர்சில தாராய்; என்
     தொய்யில் சிதைத்தானைத் தேர்கு.

     சிதைத்தானைச் செய்வது எவன்கொலே? எம்மை
     நயந்து நலஞ்சிதைத் தான்,

     மன்றப் பனைமேல் மலைமாந் தளிரே! நீ
     தொன்றிவ் வுலகத்துக் கேட்டும் அறிதியோ?
     மென்தோள் நெகிழ்த்தான் தகையல்லால், யான்காணேன்
     நன்றுதீது என்று பிற,

     நோய்எரி யாகச்சுடினும், சுழற்றி, என்
     ஆயிதழ் உள்ளே கரப்பன்; கரந்தாங்கே
     நோய்உறு வெந்நீர் தெளிப்பின், தலைக்கொண்டு
     வேவது அளித்துஇவ் வுலகு.

     மெலியப் பொறுத்தேன்; களைந்தீமின்; சான்றீர்!
     நலிதரும் காமமும் கௌவையும் என்றிவ்