தாபத நிலையொடு தபுதார நிலைஎனப்
புகன்றவை இயற்பெயர் பொருந்தா வாயின்
அகன்ற அகப்புறப் பெருந்திணை ஆகும்.’
244.
என்று கூறியன இவ்வாசிரியருக்கு
உடன்பாடல்ல என்பது கொள்க.
பிரமம் முதலிய நான்கு மணங்களும் பெருந்திணைக்குச் சிறந்தன;
மடலேறுதல் முதலிய நான்கும்
பெருந்திணைக்குச் சிறந்தன அல்ல என்பதும்
கொள்க.
‘சான்றவிர் வாழியோ சான்றவிர்’--
“சான்றோர்களே! உங்கள் கடமை பிறர் நோயினையும் தம்நோய்போல்
கருதிப் பரிகாரம் தேடுதல் ஆகும். இப்பெண் மின்னலைப்போலக்
காட்சியளித்து என் உள்ளம் புகுந்துவிட்டாள். அதுமுதல் உறக்கமில்லாத
நான் அவளைத் தவறாது அடையவேண்டி ஆவிரை எருக்கு இவற்றைச் சூடி
பனைமாமேல் ஏறி அவளைப் பற்றிப் பாடுதற்குத் தொடங்கி விட்டேன்.
அப்பெண் என்னைக் கூடாமையால் காமக் கடலில் அகப்பட்டு, பகலும்
இரவும் துன்ப அலைகள் தாக்க, இம்மடல்மாவைத் தெப்பமாகக் கொண்டு
அக்கடலை நீந்துவேன்.
இந்நோய்க்கு மருந்தாவது இவளால் உண்டான இம்மடல்மாவே.
இவள் அழகாகிய மன்மதன்படை என் ஆண்மையாகிய மதிலைத்
தகர்த்துக்
காண்போர் எள்ளிநகையாடுமாறு அதனை அழித்து
உட்புக்குவிட்டது. காமப்
பகையிலிருந்து பாதுகாவல் தருவது
இம்மடல்மாவே.
இவள், அழகில் என்மனம் ஈடுபட்டதால், உயிருக்கு
ஆபத்து நேரும்
அளவிற்கு என் உள்ளம் சுடுகிறது. காமநோய்
நெருப்பாகும். இம்மடல்மா
அவ்வெப்பம் தணிக்கும் நிழலாகும். |