னேன். ஆனால் சூடிக்கொள்ளச்
சிவபெருமான் தேடுவானே;
நாம் களவு செய்தல் வேண்டா என்று அதனை விட்டுவிட்டேன். பின்
தலைவன் வருவானோ என்ற எண்ணத்திலே கண்அயர, அவள் கனவில்
தோன்ற, அவனைக் கையால் பற்றிக்கொண்டு பின் காணக் கண்ணைத்
திறந்தபோது அவன் என் கைக்குள் மறைந்துவிட்டான்.
‘சூரியனே! நீ மலையில் மறையும்முன் என் தலைவனைக்
கண்டுபிடித்து
என்னிடம் ஒப்படைத்தால் என் துயர் தீரும்.
சூரியனே! நீ மறையும்முன் என்னிடம் உன் கிரணங்களில் சிலவற்றைக்
கொடுத்தல், நான் நீ நாளைக்
காலை வெளிப்படும் வரை
அக்கதிர்களைக்கொண்டு என்தலைவனைத் தேடுவேன்.
என்னை விரும்பி என் அழகைக் கெடுத்த தலைவனைக்
கண்டுபிடித்தால்
பெண்ணாகிய நான் என்ன செய்யமுடியும்?
மாலை ஞாயிறே! என் தலைவன் செய்தியைத் தவிர வேற்றுச்செய்தியில்
எனக்கு ஈடுபாடு இல்லை. இத்தகைய தலைவனும் உலகில் இருக்கிறான்
என்பது இதற்குமுன் அறிந்துள்ளாயோ?
இந்நோய் நெருப்பாகச் சுட்டாலும் என் கண்ணீரைக்
கண்ணுக்குள்ளேயே
அடக்கிக்கொண்டிருக்கிறேன். என் கண்ணீர் தரையில்
பட்டால் அதன்
வெப்பத்தால் உலகமே வெந்துவிடும்.
சான்றோர்களே! நான் பொறுத்துக்கொண்டிருக்கின்றேன். என் உயிரைக்
காத்தண்டாகக்கொண்டு ஒருபுறம் காமமும் ஒருபுறம் பழியும் தொங்கி
என்னை வருத்துகின்றன’ என்று, நாள்கள் பல கழிந்தமைக்காக இனைந்து
நொந்து அழுது நினைத்துப் பெருமூச்சுவிட்ட தலைவி, தலைவன்
போர்க்களத்தினின்றும் மீண்டு வந்தானாக, தேற்றாங்கொட்டையால்
|