தெளிய வைக்கப்பட்ட கலத்துநீர்போல
மனம் தெளிந்து தலைவனைச்
சார்ந்து, மணியும் அதன் ஒளியும்போல இருவரும் பிரிக்கமுடியாத
இயல்பினர் ஆயினமையால், பண்டை அழகையும் பண்பையும்
மீளப்பெற்றாள் என்பது.
மிக்க காமத்துமிடல்: ‘ஏஎ இஃது ஒத்தன்’--
இத்தலைவன் கருமத்தால் நாணம் இல்லாதவன். தன்னை
விரும்பாதவரையும்
தான் விரும்பி வலியக் கையைப் பிடித்து இழுக்கின்றான்.
‘பூங்கொடியே! உனக்கு விருப்பம் உண்டு என்பதனையும் இல்லை
என்பதனையும் நீயே அறிவாய்; யான் அறியேன். உன்னைத் தழுவுதல்
இனிதாக இருந்தமையால் உன்னைத் தழுவினேன்.’
‘எல்லா! தமக்கு இனிதாக இருக்கிறது என்று கருதிப் பிறர்
விரும்பாமலேயே
அவருக்குத் தீங்கு செய்தல் தக்கதா?’
‘சுடர்த்தொடி! உன் அறியாமையைப் போக்கிகொள். நீர் வேட்கை
உற்றவர்
தமக்கு நீர் பருகுதல் இனிது என்று நீரைப் பருகுகின்றாரே ஒழிய,
நீருக்கு அஃது இனிதா என்று பார்த்துப் பருகுவதில்லை.’
‘ஐந்தலைப் பாம்பினிடம் அகப்பட்டுச் செய்வது அறியாது
தடுமாறுகின்றேனே.’
‘பெண்களை வலியக் கைப்பற்றும் இராக்கதமும் மணங்களில் ஒன்றாகச்
சான்றோரால் கூறப்பட்டுள்ளது.’
‘ஓ! அறமும் அப்படி உள்ளது; நம் கூற்றைக் கேளாது இவனும்
துன்புறுத்துகிறான். யாம்
இருவரும் வேறுபட்டவர் அல்லர் என்ற கருத்தும்
உண்டு. ஆதலின், மனமே! இவன் எண்ணத்துக்கு மாறாத நடத்தல் நமக்கு
விருப்பம் அன்று.’ என வலியப்பற்றிய தலைவனோடு மாறுபட்டு உரையாடி
இறுதியில் தலைவி கூட்டத்திற்கு இயைந்தவாறு.
|