பக்கம் எண் :

910இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

நச

      நச்சினார்க்கினியர் புறத்திணையியல் உரைக்கண் தந்துள்ள
எடுத்துக்காட்டு வெண்பாக்கள் சில பெரும்பொருள் விளக்கம் என்ற நூலைச்
சார்ந்தன என்பது புறத்திரட்டு என்ற தொகைநூல் வாயிலாகப் புலனாகிறது.
நூற்பாவோடு எடுத்துக்காட்டுக்களும் அந்நூலாசிரியராலேயே
இயற்றப்பட்டனபோலும். பெரும்பொருள் என்பதும், பெரும்பொருள்
விளக்கம் என்பதும் ஒரே நூலோ வெவ்வேறு நூல்களோ என்ற செய்தியை
அறிதல் இக்காலத்து அரிதாயுள்ளது. இவ்வாசிரியர் காலத்து அந்நூல்
இருந்ததுபோதும். ஆனால் அந்நூலிலிருந்து இவர் எடுத்து மொழிந்ததாக
எதனையும் குறிப்பிடாததும் உளங்கொளத்தக்கது.
 


ஒத்த நூற்பா
 

                     முழுதும்--                                  ந. அ. 252


226


முதலாவது அகத்திணையியல் முற்றும்.
-----