பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]21


       வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக்
      குஞ்சி மலைந்தானெங் கோ”
                [பு. வெ. வஞ். 1]
எனவரும்.

     
2. ஓடாப்படை யியங்கரவத்திற்குச் செய்யுள்:-

      “பௌவம் பணைமுழங்கப் பற்றார்மண் பாழாக
      வவ்விய வஞ்சி வலம்புனையச்-செவ்வே
      லொளிறும் படைநடுவ ணூழித்தீ யன்ன
      களிறுங் களித்ததிருங் கார்”          
     [பு. வெ. வஞ். 2]
எனவரும்.

     
3. குடைநாட்கோடற்குச் செய்யுள்:-

      “முன்னர் முரசிரங்க மூரிக் கடற்றானைத்
      துன்னருந் துப்பிற் றொழுதெழா-மன்ன
      ருடைநா ளுலந்தனவா லோதநீர் வேலிக்
      குடைநா ளிறைவன் கொள”         
      [பு. வெ. வஞ். 3]
னவரும்.

     
4. வாணாட்கோடற்குச் செய்யுள்:-

     
“அறிந்தவ ராய்ந்தநா ளாழித்தேர் மன்ன
      னெறிந்தில கொள்வா ளியக்க-மறிந்திகலிப்
      பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு
      நன்பகலுங் கூகை நகும்”          
       [பு. வெ. வஞ். 4]

எனவரும். பின்பகல், இரவு.

     
5. கொற்றவை நிலைக்குச் செய்யுள்:-

      “அணங்குடை நோலை பொரிபுழுக்கல் பிண்டி
      நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்துக்-கணம்புகலக்
      கையிரீஇ மண்டைக் கணமோடி காவலற்கு
      மொய்யிரியத் தான்முந் துறும்” 
            [பு. வெ. வஞ். 5]

எனவரும். நோலை, எட்கசிவு.

      6.
வெற்றிவேலுழவர் செய்தொழில் கூறிய மற்றதன் பகுதிக்குச்
செய்யுள்:-