"தமருட் டலையாத றார்தாங்கி நிற்ற லெமருள்யா மின்னமென் றெண்ண-லமரின் முடுகழலின் முந்துறுதன் முல்லைத்தார் வேந்தற் றொடுகழலின் மைந்தர் தொழில்" [பு. வெ. வஞ். 6] எனவரும். 7. மறிதிரையுலகம் வணங்க எஃகுயர்த்த குரிசிலைவழுத்திய கொற்றவஞ்சிக்குச் செய்யுள்:- "அழலடைந்த மன்றத் தலந்தயரா நின்றார் நிழலடைந்தே நின்னையென் றேத்திக்-கழலடையச் செற்றங்கொண் டாடிச் சிலைத்தெழுந்தார் வீந்தவியக் கொற்றங்கொண் டெஃகுயர்த்தான் கோ" [பு. வெ. வஞ். 7] எனவரும். 8. வேந்தனைப் புகழ்ந்து வேற்றுநாடழிபு கூர்ந்தமைக்கு இரங்கிய கொற்றவள்ளைக்குச் செய்யுள்:-* "தாழார மார்பினான் றாமரைக்கண் சேந்தனவாற் பாழாய்ப் பரிய விளிவதுகொல்-யாழாய்ப் புடைத்தே னிமிர்கண்ணிப் பூங்கட் புதல்வர் நடைத்தே ரொலிகறங்கு நாடு" [பு. வெ. வஞ். 8] எனவரும். வள்ளை, உலக்கைப்பாட்டு. 9. பொருமுறை பகையொடு பொருத வீரர்க்குப் பெரிதருள்சுரந்த பேராண்வஞ்சிக்குச் செய்யுள்:- "பலிபெறு நன்னகரும் பள்ளி யிடனு மொலிகெழு நான்மறையோ ரில்லு-நலிவொரீஇப் புல்லா ரிரியப் பொருதார் முனைகெடுத்த வில்லார்க் கருள்சுரந்தான் வேந்து" [பு. வெ. வஞ். 9] எனவரும். 10. அருந்திறையளப்ப ஆறிய சினத்தோடு பெரும்பூண் மன்னவன் பெயர்ந்த பக்கத்திற்குச் செய்யுள்:- "கூடி முரசிரங்கக் கொய்யுளைமா முன்னுகளப் பாடி 1 பெயர்த்திட்டான் பல்வேலான்-கோடி * புறநா. 4, 7, 41, 98, 100. (பா - ம்) 1 பெயர்ந்திட்டான் |